Close Menu
    What's Hot

    இப்படியும் ஒரு நண்பர்… சவுதியில் வாங்கிய கடனை  34 ஆண்டுகளுக்கு பிறகு தேடிச் சென்று கொடுத்தார்

    விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் மிஷ்கின்..! அவர் ஒரு எரிமலை என புகழாரம்..!

    ரூ.100 கோடி வசூல் விவகாரம்..!! திமுக பிரமுகர் பி.டி அரசகுமார் மீது பாய்ந்த குண்டாஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சங்கத்துல உறுப்பினரா இல்லைன்னா நடிக்க முடியாது – சின்னத்திரை நடிகர்கள் சங்கம் அறிவிப்பு!
    Featured

    சங்கத்துல உறுப்பினரா இல்லைன்னா நடிக்க முடியாது – சின்னத்திரை நடிகர்கள் சங்கம் அறிவிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 tv artist
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சின்னத்திரை நடிகர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காக சின்னத்திரை நடிகர்கள் சங்கம் தரப்பில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அந்தக் கோரிக்கை தீர்மானம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதமாக அனுப்பப்பட்டுள்ளது.

    அந்த தீர்மான விவரம் வருமாறு;-

    1.சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை:

    சின்னத்திரை தொடர்களில் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாமல் நடித்து வருபவர்களை  கண்காணிக்க ‘ஸ்குவாட்’ (Squad) குழுக்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தளங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு உறுப்பினராக இல்லாதவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு உறுப்பினர் அட்டையை பெற 28 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அதற்குள்ளும் அவர்கள் கார்டு பெறவில்லை எனில், அவர்கள் நடிப்பதற்கான அனுமதி மறுக்கப்படும்

    2. சிறு கதாபாத்திரங்களிலும் சங்க உறுப்பினர்களே நடிக்க வேண்டும்:

    ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்டுகள் (Junior Artist Agents) கூட்டத்தை (Crowd) மட்டுமே வழங்க வேண்டும்; வசனம் பேசி நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு ஆட்களை அனுப்பக் கூடாது. மருத்துவர், வழக்கறிஞர் போன்ற ஒரு நாள், இரண்டு நாள் வரக்கூடிய சிறு கதாபாத்திரங்கள் என்றாலும், அதில் சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    3. கூடுதல் நேரப் பணிக்கு கூடுதல் ஊதியம்:

    சின்னத்திரை படப்பிடிப்பு நேரம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே. சில சூழ்நிலைகளில் பணி நீட்டிக்கப்பட்டால், இரவு 12 மணி வரை வேலை செய்யும் பட்சத்தில் அரை நாள் கூடுதல் ஊதியமும் (Half-day pay), நள்ளிரவு 2 மணி வரை நீடித்தால் இரட்டிப்பு ஊதியமும் (Double pay) வழங்கப்பட வேண்டும்.

    4. நடிகர் உதவியாளர்களுக்கான புதிய கட்டுப்பாடு:

    சமீபகாலமாக நடிகர்களின் உதவியாளர்கள் (Helpers/Assistants) தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. இதனை சீரமைக்க, உதவியாளர்களின் ஆதார் விபரங்களை சேகரித்து, சின்னத்திரை நடிகர் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் அவர்களுக்கு ஒரு பிரத்யேக ‘டேக்’ (Tag/அடையாள அட்டை) வழங்கப்படும். இந்த டேக் வைத்துள்ள உதவியாளர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

    Chinnathirai Actors Association membership rule Television Actors Association TV actors
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article” முதலில் கட்சியைக் காப்பாத்த பாருங்க…” – இபிஎஸ்-க்கு தவெக பதிலடி
    Next Article ஐ.நா. உறுப்பு நாடு அங்கீகாரம்: பாலஸ்தீனத்துக்கு இந்தியா மீண்டும் ஆதரவு
    Editor TN Talks

    Related Posts

    இப்படியும் ஒரு நண்பர்… சவுதியில் வாங்கிய கடனை  34 ஆண்டுகளுக்கு பிறகு தேடிச் சென்று கொடுத்தார்

    July 14, 2026

    விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் மிஷ்கின்..! அவர் ஒரு எரிமலை என புகழாரம்..!

    July 14, 2026

    ரூ.100 கோடி வசூல் விவகாரம்..!! திமுக பிரமுகர் பி.டி அரசகுமார் மீது பாய்ந்த குண்டாஸ்..!!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இப்படியும் ஒரு நண்பர்… சவுதியில் வாங்கிய கடனை  34 ஆண்டுகளுக்கு பிறகு தேடிச் சென்று கொடுத்தார்

    விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் மிஷ்கின்..! அவர் ஒரு எரிமலை என புகழாரம்..!

    ரூ.100 கோடி வசூல் விவகாரம்..!! திமுக பிரமுகர் பி.டி அரசகுமார் மீது பாய்ந்த குண்டாஸ்..!!

    சென்னை : 18 அரசுப் பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க்..! ஹுண்டாய் நிறுவனத்தின் நெகிழ்ச்சி செயல்..!

    பால் கொள்முதல் விலை அதிகரிப்பா? –  விரைவில் முதலமைச்சர் முடிவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.