தவெக சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கிய நிலையில் 10,000 மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு நேர்காணலும் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் இன்று ( 06.02.2026 ) தேமுதிக சார்பில் தவெக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டது.
இதற்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலும், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திலும் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். குறிப்பாக தவெக அலுவலகம் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக அளவுக்கு அதிகமான மக்கள் கூடினர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சி.டி.ஆர். நிர்மல் குமார், ” தவெகவில் ஒரு மணிநேரத்தில் 10,000 விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் நாளை மனு விநியோகம் செய்யப்படும் என்றார். 14-ம் தேதி வரை அவகாசம் இருப்பதால், நிர்வாகிகள் பொறுமையாக வந்து மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும், விஜய்யின் பெயரில் எவ்வளவு மனுக்கள் வாங்கப்பட்டுள்ளது என்பது கணக்கிடப்பட்டு வருவதாகவும் “ தெரிவித்தார்.
