நீண்ட இழுபறிக்கு பிறகு முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கோவையிலும் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் முதல் தவெக நிர்வாகிகள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கோவை உப்பிலிபாளையம் காஸ்மோ திரையரங்கில் ஜனநாயகன் ஒன்பது மணி காட்சிக்கு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் விஜய் யுவராஜ் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும்,  முதலமைச்சருமான விஜயின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் என்பதால் இதனை என்றும் தன்னுடைய மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்

என்பதற்காக கட்சியின் சின்னமான விசில் சின்னத்தை கையில் பொறிக்க வேண்டும் திரைப்படம் தொடங்கிய சில நிமிடங்களை மட்டும் பார்த்துவிட்டு திரையரங்க வாயிலில் பச்சை குத்தி கொண்டார்.

சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிரி பிரசாத் அருகில் அமர வைத்துக்கொண்டு கட்சியின் சின்னத்தை பச்சை குத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version