பொதுவாகவே தமிழக வெற்றிக் கழகத்தை ரீல்ஸ் கட்சி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது உண்டு. அதற்கேற்றார் போல, அமைச்சர்கள் முதல் கடைநிலை நிர்வாகிகள் வரை, தவெகவை சேர்ந்தவர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் வீடியோவாக எடுத்து அதனை சோஷியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக் கொண்டுள்ளனர்.

அப்படி, விருதுநகர் மாவட்டம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல் என்பவர் அங்குள்ள போலியோ சொட்டு மருந்து முகாமொன்றில் நுழைந்து அரசு பணியாளர்களிடம் விசாரணை நடத்தி அதனை வீடியோவாக எடுத்து, சினிமா பாடலுடன் எடிட் செய்து ரீல்ஸாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேலை, 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கம் செய்வதாக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.செல்வம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கட்சியின் ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கும் முரணான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை இந்த நடவடிக்கை” எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version