திமுக சார்பில் தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக 2ஆவது முறையாக ஆளுநரிடம் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்தை குறிப்பிட்டும் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை தவெக விலைக்கு வாங்க முற்பட்டதாக ஆளுநரிடம் திமுக புகார் அளித்திருந்தது.

தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெக தங்களை அணுகினார்கள், பிடித்திருந்தது நாங்கள் இணைந்து கொண்டோம் என்று பேசியதை குறிப்பிட்டு இன்று மீண்டும் திமுக சார்பில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக வழக்கறிஞர்  மருதுகணேஷ் ( மாநில துணை செயலாளர் – திமுக சட்டத்துறை ) மற்றும் திமுகவின் தலைமைக் கழக வழக்கறிஞர் கவி கணேசன் ஆகிய இருவரும் மக்கள் பவனில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வழங்கிய மனுவை வழங்க சென்றனர். ஆளுநர் இல்லாததால் ஆளுநர் செயலாளரிடம் மனு அளித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழக முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் என்பது குறித்து திமுக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு என்றாலும் அவர்களிடம் தெரிவிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளதால், கரூர் சம்பவம் குறித்து விஜய் பேசியது தொடர்பாக திமுக சார்பில், நீதிமன்ற கமிட்டிக்கு, அனுப்பி உள்ளோம். அந்த மனுவை சிபிஐக்கும் அனுப்பி உள்ளார்கள்.

தவெக குதிரை பேர ஊழலில் ஈடுபட்டுள்ளது குறித்து ஏற்கனவே 4 ஆம் தேதி ஆளுநரை நானும் குழுவினரும் சந்தித்து புகார் கொடுத்தோம்.

அந்த புகாரில் வைகோ அவரின் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் அவர்களுக்காக விஜய் பிரச்சாரம் செய்வதாக தெரிவித்ததை குறிப்பிட்டிருந்தோம். அதேபோல் விஜயபாஸ்கர் வெளிப்படையாக செய்தியாளர் சந்திப்பில் தன்னை தவெக அழைத்தார்கள் என்று சொன்னது குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கு தகுந்த ஆதாரம் என்று சுட்டிக்காட்டும் வகையில் தற்போது புகார் கொடுத்துள்ளோம்.

கரூரில் விஜய்யின் பேச்சில் உண்மைக்கு புறம்பான எவ்வளவு கருத்துக்கள் உள்ளது. அவர் பேசிய பேச்சை பார்த்திருப்பீர்கள். கொளத்தூரில் கொத்து புரோட்டாவாக ஆகிவிட்டார்கள் என்று கீழ்த்தரமாக பேசியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி அவர்கள் சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை அதிமுகவினர் நாங்கள் சாப்பிட்டு போட்ட இலை தான் என்று சொல்லி உள்ளார்.

இது போன்ற அரசியல் பேச்சுகளை விஜய் பேசினால் நாங்களும் பேச வேண்டிய நிலைக்கு வந்து விடுவோம்.

எச்ச இலைகளை வைத்து விழா நடத்திவிட்டு மிகப்பெரிய பொய்யை சொல்கிறார்.

கரூரில் அறநிலையத்துறை சார்பில் அரசு நிலத்தை எடுத்துக் கொண்டது என்று அதற்கு விஜயபாஸ்கர் மனு கொடுப்பது போலவும் அதை விஜய் ஏற்றுக்கொள்வது போலவும் செயல்படுத்தினார்கள் இது 10 ஆம் தேதி நடந்தது ஆனால் அரசாணை 9 ஆம் தேதியே போடப்பட்டு விட்டது.  உடனடியாக உத்தரவு போட்டது போல் நாடகம் நடத்துகிறார்கள்.

ஏற்கனவே திமுக, அதிமுக, பாஜக தரப்பில் ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம்.

ஆளுநருக்கு நேரம் கொடுக்க வேண்டும் அவர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நியாயமான கால அவகாசம் வழங்குவோம். அந்த கால அவகாசத்திற்குள் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்.

முன்னாள் அனிதா ராதாகிருஷ்ணன் 6 மாதத்தில் முதலமைச்சராக மு க ஸ்டாலின் வருவார் என்று பேசியது குறித்த கேள்விக்கு, அது அவருடைய விருப்பம் . அவர் ஆசைக்கு குறுக்கே நான் நிற்க விரும்பவில்லை என்றார்.

கூட்டணி கட்சிகள் பற்றி கேட்டு திசை திருப்ப வேண்டாம். அதுதான் மக்களிடம் சென்று சேருகிறது முக்கியமானது சென்று சேர்வதில்லை.

கடந்த தேர்தலில் செத்த பாம்பை அடித்துக் கொண்டு இருந்தோம். கரு நாகம் உள்ளே புகுந்துவிட்டது. அந்த தவறை தொடர்ந்து செய்ய விரும்பவில்லை

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version