தமிழ்நாட்டின் அடிமடியில் கைவைத்துச் சுரண்டிய தீய சக்தியும், ஊழல் சக்தியும் தவெகவின் 15 நாள் தூய ஆட்சிக்கே ஆடிப்போய் இருப்பதாக தவெக ஐ.டி.விங் பதிவிட்டுள்ளது.

ஒரு நிர்வாகத் துப்புரவை வெற்றித் தலைவர் விஜய் நடத்திக் கொண்டிருப்பதாகவும், அந்தத் துப்புரவில் 60 ஆண்டுகளாய் அகப்படாத ஆவணங்களும் சிக்கிக்கொண்டிருக்கின்றன; அகலவாய்த் திருடர்களின் சுரண்டல்களும் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 டாஸ்மாக் ஊழல் துர்நாற்றம் களையப்பட்டு வருகிறது. இதுவரை அடித்த கொள்ளை, மக்கள் முன் விளக்கப்பட்டு வருகிறது. மின் துறையில் எரிபொருள், உபகரணம், மின் மாற்றி, துணை மின் நிலையம், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் கொள்முதல், மின் துறை ஊழியர்கள் என ஷாக்கடிக்கும் ஊழல்களை சலவைக்குப்போட்டு வெளுத்து எடுத்துக்கொண்டிருக்கிறது வெற்றிக்கழக அரசு.

புகைப்படக்கலைஞர் முதல் உயர்நிலை அரசு செயலாளர் வரை அத்தனை நியமனங்களும் ஒழுக்கமான, நேர்மையான நிர்வாகம் என அசைக்க முடியாத வரையறைக்கு கீழே கொண்டுவரப்பட்டுள்ளன.

தலை சுத்தமாக இருந்தால் தான், உடல் சரியாக இயங்கும். தலைமைச்செயலகம் என்கிற தமிழ்நாட்டின் நிர்வாகத்தலையை, மூளையை பீடித்திருந்தபுரோக்கர்கலாச்சாரத்தை வெற்றித்தலைவர் அரியணையில் ஏறிய அடுத்து சில நாட்களுக்குள் அடியோடு ஒழித்திருக்கிறார்.

 

இனி வரும் எந்தக்காலத்திலும் ஊழல், கமிஷன், கையூட்டு இந்த வார்த்தைகளுக்கே இடமில்லை என்ற நிலையை தமிழ்நாட்டை நகர்த்திக்கொண்டிருக்கிறார் மனசாட்சியுள்ள மக்களாட்சியின் முதலமைச்சர்.

இந்த களையெடுப்பு நிர்வாகம், ஊழலிலும் சுரண்டலிலும் ஊறித்திளைத்து மாறி மாறி ஊழல் டீலிங் ஆட்சி நடத்தியவர்களின் தூக்கத்தையும், கனவுகளையும் குலைத்துப்போட்டிருக்கிறது.

விரைவில் தமிழ்நாடு நிர்வாகம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version