மிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக கடுமையாக விமர்சித்திருந்தார்.

”ஊரை அடித்து உலையில் போட்ட கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கு இருக்கிறார் என தெரியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்” எனக் கிண்டலடித்து இருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி, ”கரூர் துயரச் சம்பவத்தின் போது மக்களைக் காப்பாற்றியது யார்?  பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல்,  தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது  கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்” எனக் கூறி இருந்தார்.

இந்த நிலையில், இதற்கு தவெக ஐடி விங் கொடுத்துள்ள பதிலடியில், “கரூர் கம்பெனி முதலாளியும் தலைமைக் குடும்பத்திற்குக் கப்பம் கட்டுபவருமான மிஸ்டர் மெகா க்ளீன்(?), ஒரு ட்விட் போட்டு உருட்டி இருக்கிறார். அதில் தானும் உருண்டு புரண்டு, அய்யோ அம்மா நெஞ்சு வலி என்று கார்க் கதவை உதைத்துக்கொண்டே கதறியது போலக் கதறி இருக்கிறார்

அரசியல் வியாபார vending machine திமுகவால் purchase செய்யப்பட்டு, பின்னர் அறிவாலய வாஷிங் மெஷினில் போட்டு வெளுத்தெடுக்கப்பட்டவர், டாஸ்மாக் ஊழல் Don, இன்று நேர்மையாளர் போலப் பேசுவது, நரி நடனமாடுவது போல நகைச்சுவையாக இருக்கிறது.

உண்மையும் நேர்மையும் இருந்தால், ஓடி ஒளியாமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டியதுதானே? அந்தத்  திராணி இல்லாமல் தெறித்து ஓடிய நீங்கள் எல்லாம்?????

நாடே சிரிக்கிறது இந்த நரித்தந்திர நாயகர், ஊழல் உத்தமரைப் பார்த்து. இனியும் உங்கள் உத்தமர் வேடம் எடுபடாது, மிஸ்டர் மெகா க்ளீன்(?)” எனக் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version