Close Menu
    What's Hot

    கோகுல்ராஜ் கொலை வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100கோடி வசூல் விவகாரம் : திமுக பிரமுகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..!

    இப்படியும் ஒரு நண்பர்… சவுதியில் வாங்கிய கடனை  34 ஆண்டுகளுக்கு பிறகு தேடிச் சென்று கொடுத்தார்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சாமானியருக்கு ஒரு சட்டம்; தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டமா? – உதயநிதி சாடல்!
    Featured

    சாமானியருக்கு ஒரு சட்டம்; தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டமா? – உதயநிதி சாடல்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    016 uthaya
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாகர்கோவிலில் நீதிமன்றக் காவலில் மாற்றுத்திறனாளி இளைஞர் உயிரிழந்தது குறித்து சாமானியருக்கு ஒரு சட்டமா? தவெக நிருவாகிக்கு ஒரு சட்டமா என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.

    சமூக வலைத்தளத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளதில், நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

    கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

    ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தேக் கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    காவல்துறையை தனதுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ள உதயநிதி ஸ்டாலின்,  சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளதாகவும்,

    சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது என்றும் விமர்சித்துள்ளார்.

    இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.

    சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    double standards Political criticism Tamil Nadu Politics TVK Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article சாத்தங்குடி காதலர்கள் உயிரிழந்த விவகாரம்! நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்பினரால் தள்ளுமுள்ளு!
    Next Article ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: முக அங்கீகாரம் உள்ளிட்ட டிஜிட்டல் புரட்சி விரைவில்!
    Editor TN Talks

    Related Posts

    கோகுல்ராஜ் கொலை வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    July 14, 2026

    தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100கோடி வசூல் விவகாரம் : திமுக பிரமுகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..!

    July 14, 2026

    இப்படியும் ஒரு நண்பர்… சவுதியில் வாங்கிய கடனை  34 ஆண்டுகளுக்கு பிறகு தேடிச் சென்று கொடுத்தார்

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோகுல்ராஜ் கொலை வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100கோடி வசூல் விவகாரம் : திமுக பிரமுகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..!

    இப்படியும் ஒரு நண்பர்… சவுதியில் வாங்கிய கடனை  34 ஆண்டுகளுக்கு பிறகு தேடிச் சென்று கொடுத்தார்

    விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் மிஷ்கின்..! அவர் ஒரு எரிமலை என புகழாரம்..!

    ரூ.100 கோடி வசூல் விவகாரம்..!! திமுக பிரமுகர் பி.டி அரசகுமார் மீது பாய்ந்த குண்டாஸ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.