கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரன் ஊராட்சி பரலி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுப்பிள்ளை என்கின்ற தங்கமணி. திமுக ஐ.டி.விங் அணியைச் சேர்ந்த இவர், இவர் தனது முகநூலில் திமுக அரசுக்கு ஆதரவாகவும் அப்போதைய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகவும் பல்வேறு பதிவுகள் செய்து வந்தார்.
தற்பொழுது தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைக்கப்பட்டு முதல்வராக ஜோசப் விஜய் இருந்து ஒரு நிலையில் கடந்த 10 கரூர் மாவட்டத்திற்கு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தார்.
அப்போது திமுக பிரமுகர் தங்கமணி தனது முகநூல் பகுதியில் தமிழக முதல்வரை மிகவும் அருவருக்கத் தக்க முகம் சுளிக்கும் வகையில் பதிவுகள் செய்திருந்தார்.
இதையடுத்து முதலமைச்சரை ஆபாசமாக தகாத வார்த்தைகள் கூறி பதிவிட்ட தங்கமணி மீது நடவடிக்கை எடுக்கும்படி, குளித்தலை நகர தமிழக வெற்றி கழகத்தின் நகர செயலாளர் விஜய் என்கின்ற விஜயகுமார் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, திமுக பிரமுகர் வேலுப்பிள்ளை என்கின்ற தங்கமணியை குளித்தலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்த குளித்தலை எம்எல்ஏ சந்திரன் ஒன்றிய செயலாளர் தியாகராஜன் மாவட்ட அமைத்தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒன்று கூடினார்கள்.
குளித்தலை போலீசார் கைது செய்யப்பட்ட வேலு பிள்ளையை குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பதால் அவரை நீதியரசர் பிணையில் விடுவித்தார்.
