Close Menu
    What's Hot

    சென்னை மக்களே..!! தொடர் மின்வெட்டுக்கு இதுதான் காரணமாம்..!! மின்வாரியம் சொல்வது என்ன..??

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மாறி மாறி பழிபோடும் அமெரிக்கா-ஈரான்!. “எங்க மாலுமிகள் உயிரோடு விளையாடாதீங்க!. ஜெய்சங்கர் வார்னிங்!
    Featured

    மாறி மாறி பழிபோடும் அமெரிக்கா-ஈரான்!. “எங்க மாலுமிகள் உயிரோடு விளையாடாதீங்க!. ஜெய்சங்கர் வார்னிங்!

    Editor web3By Editor web3June 13, 2026Updated:June 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jaishankar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய கிழக்கில் இந்திய மாலுமிகளைக் கொண்ட வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் 3 இந்திய மாலுமிகள் பலியான விவகாரம், தற்போது சர்வதேச அளவில் பெரும் போராக மாறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைத் தொடர்பு கொண்டு இந்தியாவின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

    https://x.com/DrSJaishankar/status/2065518118802461072?

    இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், “வளைகுடா பகுதியில் 3 இந்திய மாலுமிகள் பலியாவதற்குக் காரணமான அமெரிக்க கடற்படையின் தாக்குதல்களுக்கு இந்தியாவின் வலுவான எதிர்ப்பை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் மீண்டும் வலியுறுத்தினேன். வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் இத்தகைய கொடிய தாக்குதல்கள் எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாதவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

    வளைகுடாப் பகுதியில் இந்த வாரம் முழுவதும் இந்திய மாலுமிகள் இருந்த வணிகக் கப்பல்கள் அடுத்தடுத்து இலக்கு வைக்கப்பட்டன.  கடந்த 8 ம் தேதி பலாவ் நாட்டு கொடியுடன் சென்ற இக்கப்பலில் 24 இந்திய மாலுமிகள் இருந்தனர். ஓமன் கடலோரப் பகுதியில் தாக்கப்பட்ட இவர்களை ஓமன் ராணுவம் மீட்டது.

    இதேபோல் கடந்த கடந்த 10ம் தேதி மற்றுமொரு பலாவ் கொடி தாங்கிய கப்பல் தாக்கப்பட்டதில், 3 இந்திய மாலுமிகள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். தொடர்ந்து கடந்த 11ம் தேதி கினியா-பிசாவ் கொடியுடன் சென்ற இக்கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதிலிருந்த 20 இந்திய மாலுமிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    இந்தத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக உயர் அதிகாரி ஜேசன் மீக்ஸை நேற்றைய தினம் மத்திய அரசு நேரில் அழைத்து தனது கடும் கண்டனத்தை முறைப்படி பதிவு செய்தது.

    இந்திய மாலுமிகள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று கூறி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    அதிபர் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், “ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ட்ரோன்  தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஈரான் தனது செயல்களை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

    https://x.com/Iran_in_India/status/2065509494159991234?

    அதிபர் டிரம்பின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியக் கப்பல் மீதான தாக்குதலுக்கு ஈரானைக் குற்றம் சாட்டுவது முற்றிலும் அடிப்படையற்றது. ஒரே வாரத்தில் 3 இந்தியக் கப்பல்களைத் தாக்கி, 3 அப்பாவி இந்திய மாலுமிகளைக் கொன்ற கொடூரமான உண்மையை மூடிமறைக்கவும், பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பவுமே அமெரிக்கா இந்த நாடகத்தை ஆடுகிறது” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளது.

    donald trump Iran Jaishankar killed three Indian mariners Marco Rubio telephonic conversation US Secretary
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபல்வேறு அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள்; அடுத்தடுத்து 3 சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது டிஆர்டிஓ
    Next Article நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி
    Editor web3
    • Website

    Related Posts

    சென்னை மக்களே..!! தொடர் மின்வெட்டுக்கு இதுதான் காரணமாம்..!! மின்வாரியம் சொல்வது என்ன..??

    June 13, 2026

    இந்தியா எப்போது கடைசியாக பிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்றது?. ஏன் தகுதிப்பெறவில்லை?

    June 13, 2026

    நடிகையின் காலில் விழுந்த மிஷ்கின்; காரணம் என்ன?

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை மக்களே..!! தொடர் மின்வெட்டுக்கு இதுதான் காரணமாம்..!! மின்வாரியம் சொல்வது என்ன..??

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    இந்தியா எப்போது கடைசியாக பிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்றது?. ஏன் தகுதிப்பெறவில்லை?

    நடிகையின் காலில் விழுந்த மிஷ்கின்; காரணம் என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.