Close Menu
    What's Hot

    எடப்பாடி Vs வேலுமணி – துரோகப் புகாரும், அதிரடிப் பேட்டியும்!

    தேர்தல் தோல்வியும் ஸ்டாலினின் ராஜதந்திர நகர்வும்!

    10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்..! தமிழக அரசு உத்தரவு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கேரளம் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் தேர்வு!. காங்கிரஸ் தலைமை அதிரடி!
    Featured

    கேரளம் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் தேர்வு!. காங்கிரஸ் தலைமை அதிரடி!

    Editor web3By Editor web3May 14, 2026Updated:May 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    V.D. Satheesan keralam cm
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் (V.D. Satheesan) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றுவதில் நிலவி வந்த நீண்ட நேர இழுபறிக்கு, காங்கிரஸ் தேசியத் தலைமையின் இந்த அறிவிப்பு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில் 102-இல் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக, புதிய முதலமைச்சரை தேர்வுசெய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

    சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் மூத்த தலைவர்களிடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதியாக, கட்சியின் அனுபவத்தை கருத்தில் கொண்டு, டெல்லி மேலிடம் வி.டி.சதீசனை முதல்வராக அறிவித்தது. ஏற்கனவே கேரள எதிர்க்கட்சித் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்ட அவரது அனுபவம், ஆட்சி நிர்வாகத்திற்குப் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் அறிவிக்கப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். விரைவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க வி.டி.சதீசன் உரிமை கோர உள்ளார். இதன் மூலம் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆட்சி அமைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    வக்கீல் டூ முதல்வர்: கேரள ஐகோர்ட் வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கிய வி.டி.சதீசன்(61) இளம் வயதிலேயே காங்கிரஸில் சேந்தவர். இதனை தொடர்ந்து 2001ல் பர்வூர் தொகுதியில் வென்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். அத்தொகுதியில் தொடர்ந்து 6 முறை அவரே வெற்றிபெற்றது தனி சிறப்பு. முந்தைய எல்.டி.எஃப் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயலாற்றிய இவர், இந்த முறை முதலமைச்சர் அரியணையை அலங்கரிக்கவுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! என்ன நடந்தது மீட்டிங்கில்..!
    Next Article இனி ரூ.10 கூடுதலாக வாங்கினால்… டாஸ்மாக் கடும் எச்சரிக்கை!
    Editor web3
    • Website

    Related Posts

    எடப்பாடி Vs வேலுமணி – துரோகப் புகாரும், அதிரடிப் பேட்டியும்!

    May 14, 2026

    தேர்தல் தோல்வியும் ஸ்டாலினின் ராஜதந்திர நகர்வும்!

    May 14, 2026

    10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்..! தமிழக அரசு உத்தரவு..!

    May 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எடப்பாடி Vs வேலுமணி – துரோகப் புகாரும், அதிரடிப் பேட்டியும்!

    தேர்தல் தோல்வியும் ஸ்டாலினின் ராஜதந்திர நகர்வும்!

    10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்..! தமிழக அரசு உத்தரவு..!

    சரியான நேரத்தில் வெளியாகாத சூர்யாவின் கருப்பு..! கண்ணீர் விட்டு அழுத இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி..!

    செய்தியாளர்களை தவிர்க்கும் சீமான்!. முதல்வர் விஜய் காரணமா?.

    Trending Posts

    மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! என்ன நடந்தது மீட்டிங்கில்..!

    May 14, 2026

    BREAKING|மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரவு!. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

    May 14, 2026

    போர் நெருக்கடி!. சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடி தடை!

    May 14, 2026

    தேர்தல் தோல்வியும் ஸ்டாலினின் ராஜதந்திர நகர்வும்!

    May 14, 2026

    10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்..! தமிழக அரசு உத்தரவு..!

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.