Close Menu
    What's Hot

    சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்

    தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீடு தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வீ த லீடர்ஸ் தவெகவுக்கு போட்டியா?  – அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதில்!
    Featured

    வீ த லீடர்ஸ் தவெகவுக்கு போட்டியா?  – அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதில்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 kas byte
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் அமைப்புக்கு  செல்லும் இளைஞர்கள் வேறு. இதனால் தமிழக வெற்றி கழகத்திற்கு பாதிப்பு இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கு  தமிழக வெற்றி கழகம் சார்பில்  விருதுகள் வழங்கும் விழா ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நடைபெற்றது.

    இந்த விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு விருதுகளை வழங்கினார்.

    001 kas byte 1

    இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்ததாதற்கு தமிழக ஆளுநர் வருத்தம் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தேசிய கல்விக் கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து தெளிவாக கூறி இருக்கிறார் என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர்,  வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாட்டிற்கு செல்லும் இளைஞர்கள் வேறு. எங்களுடன் இருக்கும் இளைஞர்கள் மக்கள் சக்தியாக உள்ளனர். தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்தவர்கள் அனைவரும் இளைஞர்கள். பெண்கள், கல்லூரி மாணவர்கள் என்றார்.

    ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. கரூர் துயர சம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கியுள்ளதை கேள்வி கேட்கும் ஊடகங்கள் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் வேலை கொடுத்த போது ஏன்  கேள்வி கேட்கவில்லை.

     திமுக 96 இடங்களில் வெற்றி பெற்ற போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு கொடுத்தனர். அவர்கள் மந்திரி சபையில் இடம் பெறவில்லை. நாங்கள் கூட்டணி கட்சியினருக்கு மந்திரி சபையில் இடம் வழங்கியிருக்கிறோம். இந்த பெருமை தமிழக வெற்றிக் கழகத்தையே சாரும்.

    திமுக அதிமுக கூட்டணி சேர்ந்தால் என்ன தப்பு என்று டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ள நிலையில் திமுக அதிமுக இரண்டும் வட துருவம் தென் துருவமாக இருந்தது டிடிவி தினகரனுக்கு தெரியாதா. அதிமுகவின் கொள்கைகளை மாற்றி பேசுபவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    K A Sengottaiyan Tamilaga Vettri Kazhagam TVK V The Leaders
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமு.க.ஸ்டாலினுக்கு கோபம் வந்தால்..! தவெக ஆட்சி முடிந்துவிடும்..! ராஜேந்திர பாலாஜியின் பேச்சால் சர்ச்சை..!
    Next Article மரத்தில் ஏறி இரைக்கு நோட்டமிட்ட சிறுத்தை! மக்கள் அச்சம்!
    Editor TN Talks

    Related Posts

    சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 13, 2026

    மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்

    July 13, 2026

    தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீடு தொடக்கம்!

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்

    தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீடு தொடக்கம்!

    லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீராங்கனையின் சாதனை..! வரலாற்றில் இடம் பிடித்து அசத்தல்..!

    ‘அன்பே டயானா’டிரெய்லர் வெளியீடு –  நாயகன், நாயகி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்கள்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.