Close Menu
    What's Hot

    பிறந்த நாளில் ஞானபீடம் விருது – நாளை டெல்லி செல்வதாக வைரமுத்து ட்வீட்!

    உண்மையான கண்ணீருக்கு களங்கம் கற்பிக்கப்படும் – எழுத்தாளர்கள் சங்க தேர்தல்; இயக்குநர் பார்த்திபன் விளக்கம்

    ரசிகர்களின் மனங்களில் திருமதி எஸ்.ஜானகி என்றும் நிலைத்திருப்பார் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இரங்கல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காருள்ள வரை, கடல் நீருள்ள வரை ஜானகியின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் – வைகோ, ஜி.கே.வாசன் இரங்கல்
    Featured

    காருள்ள வரை, கடல் நீருள்ள வரை ஜானகியின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் – வைகோ, ஜி.கே.வாசன் இரங்கல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 12, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 sjanaki
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மறைந்த பாடகி எஸ்.ஜானகிக்கு  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கலில் கூறியிருப்பதாவது;-

    தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அனைவராலும் பாராட்டிப் புகழப்பட்ட இசைக் குயில் ஜானகி அம்மையார் தன் 88 ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக மைசூர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி இடியென என்னைத் தாக்கிய நிலையில், நிலைகுலைந்து போய் துயரில் மூழ்கி உள்ளேன்.

    கடந்த 50 ஆண்டுகளாக இரவிலும், பகலிலும், பயண நேரங்களிலும், துன்பம் சூழ்ந்த வேளைகளிலும் ஜானகி அம்மையாரின் தேனிசைப் பாடல்கள் எனக்கு அருமருந்தாக உதவின.

    ஒன்பது வயதிலேயே மேடை ஏறிப் பாடிய ஜானகி, 18 வயதில் அகில இந்திய வானொலி நடத்திய போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களிடம் பரிசு பெற்றார்.

    அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களைப் பாடிய இமாலய சாதனையாளர் ஜானகி அம்மையார், நான்கு தேசிய விருதுகள், ஐந்து தமிழ்நாடு அரசின் விருதுகள், ஆந்திரா, கேரளா, ஒடிசா அரசுகளின் விருதுகள் என 33 விருதுகள் இவரைத் தேடி வந்து இசைப் புலமைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தது.

    கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நாதசுர இசையோடு போட்டி போட்டுக் கொண்டு சிங்கார வேலனே தேவா என்ற பாடல், இளையராஜாவின் இசையமைப்பில் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற பாடல், இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன் என்ற அவரின் இன்னிசை, பொன்மேனி உருகுதே என்ற அவரின் காந்தக் குரல், மாத உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினோம் என்ற அவரின் காந்தக் குரல், தேன் சிந்துதே வானம் என்ற அவரின் இனிய பாடல், டாடி டாடி என்று மழலைக் குரலில் அவர் பாடிய பாடல் என இப்படி நூற்றுக் கணக்கான நம் நெஞ்சம் கவர்ந்த பாடல்களை நம்மால் எவ்வாறு மறக்க இயலும்?

    1957 ஆம் ஆண்டு விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒலித்த ஜானகியின் குரல் 60 ஆண்டுகளாக தொடர்ந்து ஒலித்து நம் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தது. காதல், தாய்மை, அன்பு, தமிழ் மொழியின் சிறப்பு என பல்வேறு பண்பு நலன்களை வலியுறுத்தும் அவரது பாடல்கள் நெஞ்சம் மறக்காத தேனிசைப் பாடல்கள் ஆகும்.

    அவரின் இனிமையான பாடல்கள் காருள்ள வரை, கடல் நீருள்ள வரை, இவ்வையகம் உள்ளவரை நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவர் எந்நாளும் நம்மோடு வாழ்வார்!

    அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரின் பிரிவால் துயரத்தில் மூழ்கி உள்ள குடும்ப உறவுகளுக்கும், கோடானு கோடி ரசிகர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் வருமாறு;-

    தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்ட திரைப்பட பின்னனி பாடகி S. ஜானகி அவர்கள் உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.

    S. ஜானகி அவர்கள் தனது இளம் வயதில் இருந்து திரையுலகில் பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி தேனிசை குரலால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 18 மொழிகளில் சுமார் 48,000 பாடல்களை பாடிய சாதனையாளர்.

    S. ஜானகி அவர்களின் இசைப் பணியை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசின் சார்பில் 4 தேசிய விருதுகளும், தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருதும் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் எண்ணிலடங்கா விருதுகளும் வழங்கி சிறப்பிக்கபட்டவர். அவரது இசைப் பணி காலம் கடந்து நிலைத்து நிற்கும்.

    அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

    நடிகர் ராகவா லாரன்ஸின் இரங்கல் பதிவு வருமாறு;-

    RIP ஜானகி அம்மா, ஒரு ஐதீகப் பாடகி. அவரது குரல் லட்சக்கணக்கான இதயங்களைத் தொட்டது, அவரது பாடல்கள் மூலம் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி!

     

    Condolence GK Vasan S Janaki S Janaki Death S Janaki Demise Vaiko
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியா ஒரு இசைச் சின்னத்தை இழந்துள்ளது – எஸ்.ஜானகி மறைவுக்கு குடியரசுத் தலைவர்,  உள்துறை அமைச்சர் இரங்கல்
    Next Article ரசிகர்களின் மனங்களில் திருமதி எஸ்.ஜானகி என்றும் நிலைத்திருப்பார் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இரங்கல்!
    Editor TN Talks

    Related Posts

    பிறந்த நாளில் ஞானபீடம் விருது – நாளை டெல்லி செல்வதாக வைரமுத்து ட்வீட்!

    July 12, 2026

    உண்மையான கண்ணீருக்கு களங்கம் கற்பிக்கப்படும் – எழுத்தாளர்கள் சங்க தேர்தல்; இயக்குநர் பார்த்திபன் விளக்கம்

    July 12, 2026

    ரசிகர்களின் மனங்களில் திருமதி எஸ்.ஜானகி என்றும் நிலைத்திருப்பார் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இரங்கல்!

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிறந்த நாளில் ஞானபீடம் விருது – நாளை டெல்லி செல்வதாக வைரமுத்து ட்வீட்!

    உண்மையான கண்ணீருக்கு களங்கம் கற்பிக்கப்படும் – எழுத்தாளர்கள் சங்க தேர்தல்; இயக்குநர் பார்த்திபன் விளக்கம்

    ரசிகர்களின் மனங்களில் திருமதி எஸ்.ஜானகி என்றும் நிலைத்திருப்பார் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இரங்கல்!

    காருள்ள வரை, கடல் நீருள்ள வரை ஜானகியின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் – வைகோ, ஜி.கே.வாசன் இரங்கல்

    இந்தியா ஒரு இசைச் சின்னத்தை இழந்துள்ளது – எஸ்.ஜானகி மறைவுக்கு குடியரசுத் தலைவர்,  உள்துறை அமைச்சர் இரங்கல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.