நாளை கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிறந்தநாள். இந்த நிலையில் அவர் ஞானபீட விருது வாங்க நாளை டெல்லி செல்ல இருப்பதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் உறவுகளே!

வணக்கம்.

நாளை

என் பிறந்தநாளில்

சென்னையில் இல்லை;

டெல்லி செல்கிறேன்

ஞானபீட விருதினைப்

பிறந்தநாளில் பெறும்

பெரும்பேறு வாய்த்திருக்கிறது

எங்கிருந்தாலும்

என்னை ஒருகணம்

நினைவு கூருங்கள்;

நாடும் மொழியும்

நலமுற வாழ்த்துங்கள்

இந்த 73 வயதில்

என்ன தோன்றுகிறது என்பதை

உங்களுக்குச் சொல்ல வேண்டும்

பொன்னும் பொருளும்

மண்ணும் பதவியும்

நிலைபெறுவதில்லை

செலுத்தும் அன்பும்

செய்யும் அறமுமே

நிலைபெறுகின்றன

என் வாழ்வு

அன்பின் வழியது;

எழுத்து

அறத்தினும் வலியது.

இரண்டையும் போற்றுகிறேன்

அன்பு செலுத்துக;

அறம் செய்க;

வாழ்வாங்கு வாழ்க!

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version