இயக்குநர் இமயம் பாரதிராஜா கடந்த 10-ம் தேதி காலமான நிலையில், சமீபத்தில அவரது உதவி இயக்குநராக இருந்து சினிமாவில் வளர்ந்த இயக்குநர் பாக்யராஜூம் மறைந்தது சினிமா திரையுலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாராதிராஜாவின் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”இமயத்தைப்

புதைத்த இடம் இதுதான்

தூங்கு ராஜா தூங்கு

ஓடி ஓடிக் களைத்தவனே

கலையாத உறக்கத்தில்

கனவுகளற்ற உறக்கத்தில்

ஓய்வுகொள்

மண்ணை இழுத்துப் போர்த்துப்

படுத்திருக்கும் உன்னை

குளிரோ மழையோ

வெயிலோ புயலோ

ஒன்றும் செய்யாது

நலம் கேட்க வந்த நான்

நல்லசெய்தி

கொண்டுவரவில்லை

இதே இடத்தில்

என்னோடு நின்று

இறுதி மரியாதை செலுத்திய

உன் சீடன்

உனைத்தேடி வந்துவிட்டான்

ஜோடிக் குதிரைகளை இழந்து

கவிழ்ந்து கிடக்கிறது

கலைத்தேர்

கடமை இருக்கிறது

இந்த மண்ணகத்தில்

உனக்கொரு மணிமண்டபம்;

அரசுக்குக்

கோரிக்கை வைக்கிறேன்

முதலமைச்சர் விஜயைச்

சந்திக்கவும் தயங்கமாட்டேன்

இந்த இடம்

கலைக்கோயிலாக

என்று கட்டப்படுமோ

அன்று

தேனி மாவட்டம் முழுக்க

தேவர்கள் பூச்சொரிவர்” என பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version