திருத்துறைப்பூண்டி அருகே பிரசித்தி பெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவிலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ )முன்னாள் முதன்மை தேர்வு குழு தலைவராக இருந்தவர் சேத்தன் சர்மா .

இவர் 1987 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனை படைத்தவர் சேர்த்தன் சர்மா. இந்த நிலையில் இன்று திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் அவரது மனைவி அவரது மகளுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

அவருக்கு ஆலயத்தின் சார்பில் சிறப்பு மரியாதையும் செய்யப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version