தவெகவினர் விதிகளை மீறி நடந்து கொள்வதை தவெக அரசு கண்டுகொள்ளவில்லை என பாஜக தேசிய நிர்வாகி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், வானூரில் உள்ள புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை மக்கள் பிரதிநிதியோ, அல்லது எந்த ஒரு அரசுப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர் திறந்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ள வானதி சீனிவாசன்,
தவெக உறுப்பினர் என்ற அடையாளத்தினை மட்டும் வைத்துக் கொண்டு தொடர்ந்து இவர்கள் செய்யும் இந்த விதிமுறை மீறலுக்கு அளவே இல்லை என்பது போல் தினமும் ஏதாவது ஒரு ரீல்ஸ் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டே இருப்பது தவெக அரசில் அரசு கட்டிடங்களும், அலுவலகங்களும் ஆளுங்கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ளதையே காட்டுகிறது என விமர்சித்துள்ளார்.
இவர்கள் மீது தவெக தலைமையின் நடவடிக்கையோ வெறும் கண்துடைப்பாகத் தான் உள்ளதாகக் கடுமை காட்டியுள்ள அவர், ஆளுங்கட்சியினரே அரசின் செயல்பாடுகளில் தலையிட்டால் பின்னர் எதற்கு மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இனியும் இது போன்ற விதிமீறல்கள் நடக்காவண்ணம் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளை ஆளுங்கட்சியினர் தலையீடு இல்லாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க தவெக தலைமை தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
