Close Menu
    What's Hot

    தவெக அரசு அராஜகம்; திமுகவினர் கைதுக்கு எதிராக கனிமொழி!

    விழுந்தது 6-வது விக்கெட்; அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா?

    பூதாகரமானது ரூ.100 கோடி மோசடி வழக்கு..!! Ex.அமைச்சர் சிவசங்கருக்கு பறந்த சம்மன்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உதவி பேராசிரியர் பணி நியமனத் தேர்வு முறைகேடுகள் – விசராணை நடத்த விசிக வலியுறுத்தல்
    Featured

    உதவி பேராசிரியர் பணி நியமனத் தேர்வு முறைகேடுகள் – விசராணை நடத்த விசிக வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 vck
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்  தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

    விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;-

    அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ‘ஆசிரியர் தேர்வு வாரியம்,’ கடந்த 2025ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தியது. அத்தேர்வின் முடிவுகள் 2026 ஜூன் 25 ஆம் தேதி வெளியானது. இம்முடிவுகள், தேர்வு எழுதியவர்களில் ஏராளமானவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளன.

    இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக்க் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இத்தேர்வு முடிவுகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

    உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்கு தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களே சான்றாக உள்ளன. எடுத்துக்காட்டாக,   தமிழ் –முதல் தாளில் ஒருவர் 150-க்கு 111 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், அதே நபர் தமிழ் –இரண்டாம் தாளில் 50க்கு பூஜ்ஜியம் மட்டுமே பெற்றுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொருவர் தமிழ்–முதல் தாளில் 150-க்கு 54 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், இரண்டாம் தாளில் 50-க்கு 49 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது போல பலருக்கு நடந்துள்ளது.

    பூஜ்யம் மட்டுமே வாங்கும் அளவுக்கா தேர்வு எழுதக் கூடியவர்களின் தகுதி இருக்கும்? முனைவர் பட்டம் பெற்றவர்களா பூஜ்யம் பெறும் நிலையில் தேர்வு எழுதி இருப்பார்கள்? இது நம்பக்கூடிய ஒன்றாக இல்லை. எனவே, தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன என்கிற வலுவான அய்யத்தை உருவாக்கியுள்ளது.

    இது உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாகத் தோன்றவில்லை; மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது.

    இத்தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும் என்று நம்பிக்கை வைத்து பல்லாயிரக்கணக்கானோர் எழுதியுள்ளனர். அவர்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டுள்ளன.

    எனவே, இது  குறித்து உரிய விசாரணை நடத்திட அரசு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை பணிநியமன நடைமுறைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

    Assistant Professor Recruitment Recruitment Exam VCK Viduthalai Chiruthaigal Katchi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சர் விஜய் தலைமையில்.. தொடங்கியது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மாநாடு..!!
    Next Article IAS-IPS மாநாடு சம்பிரதாயமா? சாதனையா? முதல்வர் விஜய்யை வம்பிழுத்த ஆர்.பி உதயகுமார்..!!
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசு அராஜகம்; திமுகவினர் கைதுக்கு எதிராக கனிமொழி!

    June 29, 2026

    விழுந்தது 6-வது விக்கெட்; அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா?

    June 29, 2026

    பூதாகரமானது ரூ.100 கோடி மோசடி வழக்கு..!! Ex.அமைச்சர் சிவசங்கருக்கு பறந்த சம்மன்..!!

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக அரசு அராஜகம்; திமுகவினர் கைதுக்கு எதிராக கனிமொழி!

    விழுந்தது 6-வது விக்கெட்; அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா?

    பூதாகரமானது ரூ.100 கோடி மோசடி வழக்கு..!! Ex.அமைச்சர் சிவசங்கருக்கு பறந்த சம்மன்..!!

    திருப்பூர் ரோட்டரி சங்க நிகழ்வால் பரபரப்பு ;  செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்வில் மது, மாது என அலப்பறை?

    IAS-IPS மாநாடு சம்பிரதாயமா? சாதனையா? முதல்வர் விஜய்யை வம்பிழுத்த ஆர்.பி உதயகுமார்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.