Close Menu
    What's Hot

    பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவர் பிறந்த நாள்;  அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு

    ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸுக்கு மீண்டும் அவகாசம்

    இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடர்!. சஞ்சு சாம்சன் vs சூர்யவன்ஷி!. யாருக்கு வாய்ப்பு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»” மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல்” – விசிக ‘பகீர்’ குற்றச்சாட்டு
    Featured

    ” மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல்” – விசிக ‘பகீர்’ குற்றச்சாட்டு

    Editor web2By Editor web2June 30, 2026Updated:June 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TNPCB
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் விசிக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் (TNPCB) நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் பணியிட மாற்றங்களில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியுள்ளது.

    இது தொடர்பாக விசிக பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி தனது சமூக வலைதள பதிவில், “தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் (TNPCB) சமீபத்தில் வெளியிடப்பட்ட மற்றும் விரைவில் வெளியாகவுள்ள பணியிட மாற்றப் பட்டியலில் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாக கடுமையான புகார்கள் எழுந்துள்ளன.

    தற்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவின் மாமனாரும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஓய்வுபெற்ற உறுப்பினர் செயலாளருமான விஜயபாஸ்கர் (பெயர் தற்செயலாக ஒத்துப்போவது சுவாரஸ்யம் இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    SS Balaji

    எனவே, “ஊழலற்ற ஆட்சி” என்ற அரசின் வாக்குறுதியை நிலைநிறுத்தும் வகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

    தவெக தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவளித்து வரும் விசிக நிர்வாகியின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில்,  எஸ்.எஸ். பாலாஜி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் அல்லது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    corruption TNPCB TVKGovernment VCK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆட்சி அமைக்க திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து குறுக்கு வழியில் திட்டம் –அமைச்சர் நிர்மல்குமார் பகீர்
    Next Article ’பராசக்தி’ சம்பள பாக்கி: இயக்குநர் சுதா கொங்குரா வழக்கு
    Editor web2
    • Website

    Related Posts

    பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவர் பிறந்த நாள்;  அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு

    June 30, 2026

    ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸுக்கு மீண்டும் அவகாசம்

    June 30, 2026

    இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடர்!. சஞ்சு சாம்சன் vs சூர்யவன்ஷி!. யாருக்கு வாய்ப்பு?

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவர் பிறந்த நாள்;  அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு

    ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸுக்கு மீண்டும் அவகாசம்

    இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடர்!. சஞ்சு சாம்சன் vs சூர்யவன்ஷி!. யாருக்கு வாய்ப்பு?

    அரசு ஊழியர்களுக்கான ஊக்க ஊதியம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    மதிமுகவைச் சீண்டும் விசிக; தவெகவில் கூட்டணி சேர்வதில் விருப்பமில்லையா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.