வியட்நாமில் நிகழ்ந்த படகு விபத்தில் வேலூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

வேலூர்மாவட்டம்,வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வினய் குமார். இவரது தந்தை பாஸ்கர் வேலூர் காந்திரோட்டில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

வினய் குமார் சேண்பாக்கத்தில் வாசவி &கோ என்ற பெயரில் லாவா நிறுவனத்தின் செல் போன் ஏஜென்சி டீலர் எடுத்து நடத்தி வருகிறார்.

லாவா நிறுவனம் சிறந்த விற்பனையாளர்களை தேர்வு செய்து சுற்றுலாவுக்கு வியட்நாமுக்கு அனுப்பியது. அதில் வினய் குமாரும் சென்றார். அங்கு நேர்ந்த படகு விபத்தில் சிக்கி இவர் பலியானார்.

இவருக்கு ஜெய ஸ்ரீ என்ற மனைவியும் அன்னய்யா என்ற 14 வயது மகளும் உள்ளனர். இவரது தந்தையும் தாயும் ஆன்மிக சுற்றுலாவுக்கு செனுள்ள நிலையில், அவர்களும்  செய்தி அறிந்து. வீடு திரும்புகிறார்கள்.

வேலூர் தொழிலதிபர் படகு விபத்தில் வியாட் நாமில் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் சேலத்தைச் சேர்ந்தவரும், வியட்நாம் படகு விபத்தில்  சிக்கி உயிரிழந்துள்ளார். செல்போன் கடை நடத்தி வந்த சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதி பகுதியைச் சேர்ந்த  ஸ்ரீதரும், வியட்நாமுக்கு நண்பர்களுடன் கடந்த புதன்கிழமை அன்று சுற்றுலா சென்றுள்ளார். இவரும் படகில் சென்ற போது படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார் . ஸ்ரீதருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், கார்த்தி,ஹரிணி ஆகிய இரண்டு பிள்ளைகலும் உள்ளனர். இவர்களில் கார்த்தி ஆஸ்திரேலியாவிலும், ஹரிணி ஸ்காட்லாந்திலும் பணி செய்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version