Close Menu
    What's Hot

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    கேரளா : பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 7 மாணவர்கள் காயம்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்
    Featured

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    Editor web2By Editor web2July 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தின் போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.

    நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

    நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.

    Rahul arrest 2

    நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.

    நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

     

     

    EducationReform NEET rahulgandhi TVKVijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநேற்று தொடங்கிய ED ரெய்டு.. இன்று அதிரடி நிறைவு..!! முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!
    Next Article டெல்லியில் வெடிக்கும் மெரினா புரட்சி!. மாணவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?
    Editor web2
    • Website

    Related Posts

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    July 22, 2026

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    July 22, 2026

    கேரளா : பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 7 மாணவர்கள் காயம்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    கேரளா : பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 7 மாணவர்கள் காயம்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    ஜப்பானில் மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ் கண்டுபிடிப்பு..! விலை என்ன தெரியுமா?

    பிரதமர் மோடி இதுவரை சந்திக்காத பிரம்மாண்ட போராட்டம்: டெல்லியை உலுக்கும் ‘நீட்’ புரட்சி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.