எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் காணவுள்ள தவெக தேர்தல் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்த அவர், அங்கு பிரசாரமும் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து,

இன்று திருச்சி வந்தடைந்த அவர், விமான நிலையத்தில் இருந்து திறந்தவெளி வேனில் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது, அவரை காணும் ஆர்வத்தில் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த பெண் ஒருவர் கீழே விழுந்ததை பார்த்த அவர், வேனில் இருந்து இறங்கிச் சென்று அப்பெண்ணிடம் நலம் விசாரித்தார்.

தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார். அதன்பின் திருச்சி, தஞ்சாவூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார் விஜய்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version