தமிழ்நாடு அரசின் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்க தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்கும் வகையில் வரும் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்ற தவெக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன், மதுவிலக்கு மற்றும் கலால் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் தனியார்மயக்கப்படும் நிலையில்,  முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மதுபானக்கடைகளை தனியார்மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பின்பு வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 மதுபானக்கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது டாஸ்மாக் மதுக்கடைகள் தனியார் மயமாக்கப்பட உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version