தமிழக மக்களின் நலனுக்காக ஒன்றுபட்டு பயணிப்போம், நல்லதை செய்வோம் என்று முதலமைச்சர் விஜய் உறுதி அளித்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் 2 வது முறையாக நேற்று (ஜூன் 10) டெல்லி பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ள நிதிஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளார்.

இதனிடையே டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக முதன்முறையாக சந்தித்தார். பின்னர், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய் சந்தித்து பேசினார்.

இதையடுத்து, இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரையும் அவர் சந்தித்தார்.

பின்னர், ஐடிஓ பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவை சந்தித்தார். அப்போது, ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆதரவளித்ததற்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தாக டி.ராஜா தெரிவித்தார். தமிழக மக்களின் நலனுக்காக ஒன்றுபட்டு பயணிப்போம், நல்லதை செய்வோம் என்று முதலமைச்சர் விஜய் உறுதி அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version