முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்த மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூம்.2500 எப்போது செயல்படுத்தப்படும் என்னும் கேள்விக்குஅமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார்.

மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசித்த பின்னர் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய அவர், சட்டம் ஒழுங்கு குறித்து நாள்தோறும் முதலமைச்சர் ஆய்வு செய்து வருவதாகவும், ஒவ்வொரு துறை ரீதியாகவும் முதலமைச்சர் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 50 ஆண்டுகளாக புரையோடிப்போயுள்ள துறைகளை முதலமைச்சர் தீவிரமாக ஆராய்ந்து அதனை சீர்ப்படுத்தும் நடவடிக்கையில் வேகம் காட்டுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் நிர்மல் குமார்,  தேர்தலில் தவெக அளித்த முக்கிய வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2,500 என்பது,  பட்ஜெட்டுக்கு பிறகு செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version