Close Menu
    What's Hot

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: பரபரப்பான அரசியல் சூழலில் தொடக்கம்..!! எப்போ தெரியுமா..??

    ஆளுநரைப் பற்றி அரசியல்வாதிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது; முன்னாள் ஆளுநர் தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மகளிருக்கு ரூ.2500 எப்போது?. அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
    Featured

    மகளிருக்கு ரூ.2500 எப்போது?. அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

    Editor web3By Editor web3May 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kovai sengottaiyan byte
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகளிருக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

    கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 8 மாத காலமாகத் தேர்தல் களம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான உழைப்பிற்குப் பிறகு, வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி பெற்றிருந்தேன். ஆண்டுக்கு இருமுறை உடல் பரிசோதனை செய்வது எனது வழக்கம். அந்த வகையில், ‘மாஸ்டர் செக்-அப்’ அடிப்படையில் மருத்துவமனையில் தங்கி அனைத்துப் பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. எனது உடல்நிலை குறித்த அனைத்துப் பரிசோதனை முடிவுகளும் சரியாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, விரைந்து அடுத்தகட்டப் பணிகளை மேற்கொள்வதற்காகச் சென்னைக்குச் சென்று கொண்டிருக்கிறேன் என்றார்.

    அரசு மருத்துவமனைக்குச் செல்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “என்னைப்பொறுத்தவரை இது எனது உறவினரின் மருத்துவமனை. நான் எப்போதும் இங்கே தான் சிகிச்சை பெறுவது வழக்கம். இங்கு வந்தால் ஓய்வு எடுப்பதும் அங்குதான், அந்த முறையைத்தான் இப்போதும் பின்பற்றியுள்ளேன். உறவினர் மருத்துவமனை என்பதால் எனக்கு அங்கு அனைத்தும் இலவச சலுகையாகக் கிடைக்கிறது. எனவே, வேறு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை எனக்கு இல்லை. நான் வரும்போதெல்லாம் இங்கே தங்கிச் செல்வது தொடர்ந்து நடைபெறும் ஒரு நிகழ்வு தான்” என்று விளக்கமளித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், கோவை சிறுமி கொலை வழக்கு குறித்துக் காவல்துறை மேற்கு மண்டலத் தலைவர் (IG) தெளிவாக விளக்கியுள்ளார். இது தொடர்பாகச் சட்டத்துறையும், முதலமைச்சரும் தகுந்த உத்தரவுகளை வழங்கியுள்ளனர் என்றார்.

    ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டம் எப்போது துவங்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “திமுக ஆட்சியில் இந்தத் திட்டத்தை எப்படி வழங்கினார்கள், எத்தனை ஆண்டுகள் கழித்து வழங்கினார்கள் என்பது உங்களுக்கே தெரியும். ஒவ்வொரு திட்டங்களையும் படிப்படியாக வழங்குவதற்கு, அரசின் நிதி நிலைக்கு ஏற்பவே அரசு நடவடிக்கை எடுக்கும். இது முதலமைச்சர் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. இந்தத் கேள்வியை என்னிடம் கேட்பது சரியாக இருக்காது. திட்டங்கள் குறித்து முதல்வர் தான் உரியக் காலங்களில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வார்” என்று விளக்கமளித்தார்,

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎங்களுக்கு நிதி வேண்டாம்..! நீதி தான் வேண்டும்..! கோவை சிறுமியின் தயார் கதறல்..!
    Next Article “முதல்வர் அரியணையில் இருக்கும் மற்றொரு பொம்மை”!. விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் சாடல்!
    Editor web3
    • Website

    Related Posts

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: பரபரப்பான அரசியல் சூழலில் தொடக்கம்..!! எப்போ தெரியுமா..??

    July 4, 2026

    ஆளுநரைப் பற்றி அரசியல்வாதிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது; முன்னாள் ஆளுநர் தமிழிசை

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: பரபரப்பான அரசியல் சூழலில் தொடக்கம்..!! எப்போ தெரியுமா..??

    ஆளுநரைப் பற்றி அரசியல்வாதிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது; முன்னாள் ஆளுநர் தமிழிசை

    2026 புதிய ரேஷன் கார்டு: 6 லட்சம் விண்ணப்பதாரர்களின் எதிர்பார்ப்புக்கு அரசு விளக்கம்..!!

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.