Close Menu
    What's Hot

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப்போட்டி?
    Featured

    உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப்போட்டி?

    Editor web3By Editor web3June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    communist party
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் புதிய வியூகத்தைக் கையாளத் தயாராகி வருகின்றன. வழக்கமாகப் பெரிய திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்றுவரும் இடதுசாரிகள், இந்த முறை தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.

    கேரளாவில் செயல்படும் எல்.டி.எஃப் (LDF) கூட்டணியைப் போல, தமிழ்நாட்டிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)), மற்றும் சிபிஐ (எம்.எல்) விடுதலை ஆகிய மூன்று முக்கிய இடதுசாரி அமைப்புகளையும் ஒன்றிணைத்து ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    நீண்டகாலமாகப் பிற கட்சிகளின் கூட்டணியில் இருந்ததால், தங்களின் தனித்துவத்தையும் மக்கள் செல்வாக்கையும் வெளிப்படுத்த இடதுசாரிகள் தவறிவிட்டதாகக் கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த உள்ளாட்சித் தேர்தலில் தங்களின் உண்மையான அரசியல் பலத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம் என்று தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில், இந்த இடதுசாரி கட்சிகளின் மாநில அளவிலான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  இந்த ஆலோசனை கூட்டம், தமிழக அரசியலில் இடதுசாரிகளின் அடுத்தகட்ட நகர்வையும், தேர்தல் களத்தில் அவர்களின் தனித்துவமான செயல்பாட்டையும் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. 

    CPI cpm independently? Left parties local body elections
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇயலாமையை மூடி மறைக்கிறது தவெக அரசு; வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு பதிலடி
    Next Article முதல்வருக்கு ‘செவித்திறன் கருவி’ அனுப்பிய சமூக ஆர்வலர்!. கோவையில் நூதனப் போராட்டம்!
    Editor web3
    • Website

    Related Posts

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    July 14, 2026

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    July 14, 2026

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி நிலம் மோசடி வழக்கு..! அமைச்சரை தொடர்புபடுத்த வேண்டாம்..!

    கோகுல்ராஜ் கொலை வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.