Close Menu
    What's Hot

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்களை உடனடியாக நீக்குக!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது
    Featured

    பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது

    Editor TN TalksBy Editor TN TalksJuly 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 accust
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கை மாவட்டத்தில், பைனான்ஸ் அதிபரை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய பெண் ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ​திருப்பத்தூர் தம்பிபட்டியைச் சேர்ந்த 40 வயது பைனான்ஸ் அதிபர் வடிவேலுவை கடந்த ஜூன் மாதம் கைபேசி மூலம் தொடர்புகொண்ட ‘கவிதா’ என்ற பெண், நட்புடன் பேசி பழகியுள்ளார். மேலும் தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி கடந்த ஜூன் 9-ஆம் தேதி வடிவேலுவிடமிருந்து G Pay மூலம் 4ஆயிரத்து 500 ரூபாயும் வாங்கியுள்ளார்.

    ​இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 24-ஆம் தேதி வடிவேலை தொடர்பு கொண்ட கவிதா, காரைக்குடிக்கு வந்தால் தனிமையில் இனிமை காணலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி வந்த வடிவேலுவை  பழைய ஓட்டு வீடு ஒன்றிற்கு கவிதா அழைத்துச் சென்றுள்ளார்.

    அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி மறைந்திருந்த கும்பல் ஒன்று வடிவேலை வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததோடு, கொடூரமாகத் தாக்கி ₹50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது. மேலும், அவரது ஹோண்டா இருசக்கர வாகனத்தையும் செல்போனையும்பறித்துச் சென்றுள்ளது.

    ​இச்சம்பவம் குறித்து வடிவேல் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், முதல் குற்றவாளியான கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரை தற்போது கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் மூவரை தேடி வருகின்றனர்.

     

    Blackmail Crime News Extortion inancier police Woman Arrested
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரோடு : காதலியை கழுத்தில் குத்திய காதலன்..! காதலை துண்டித்ததால் நடந்த விபரீதம்..!
    Next Article ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்!. பஹல்காம் பயங்கரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொலை!.
    Editor TN Talks

    Related Posts

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    July 5, 2026

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    July 5, 2026

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்களை உடனடியாக நீக்குக!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்களை உடனடியாக நீக்குக!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு!

    அனிதா ராதாகிருஷ்ணன் கைது ஏற்கமுடியாது; ஆதவ் அர்ஜுனா கூறும் பர்சண்டேஜ் எது? – டிடிவி தினகரன் கேள்வி!

    அயோத்தி ராமர் கோயில் சர்ச்சை!. ரூ.5 கோடி மதிப்பிலான தங்க புத்தகம் மாயம்!. முன்னாள் அதிகாரி பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.