Close Menu
    What's Hot

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மஞ்சள், சிவப்பு நிற வண்ணங்களுடன் டீசல், சி.என்.ஜி பேருந்துகள் விரைவில் அறிமுகம்  
    Featured

    மஞ்சள், சிவப்பு நிற வண்ணங்களுடன் டீசல், சி.என்.ஜி பேருந்துகள் விரைவில் அறிமுகம்  

    Editor TN TalksBy Editor TN TalksJuly 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 bus
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் நவீன டீசல் மற்றும் சி.என்.ஜி (CNG) பேருந்துகள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற வண்ணங்களுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் உட்பட சுமார் 50 கி.மீ சுற்றளவு வரை சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் 650 க்கு மேற்பட்ட வழிதடங்களில் 3200 க்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது

    சாதாரண கட்டண பேருந்துகள் (Standard Buses), சொகுசு மற்றும் குளிர்சாதன (AC) பேருந்துகள், மற்றும் புதிய மின்சாரப் பேருந்துகள் (EVs) உட்பட பல்வேறு வகைபாடு அடிப்படையில் பல்வேறு நிறங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள் புதிய பேருந்துகள் கொள்முதலின் போது தங்களுக்கு விருப்பப்பட்ட நிறங்களில் பேருந்து நிறங்களை வடிவமைத்து கொள்முதல் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு மண்டலங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இயக்கப்பட்டிருந்தன.

    தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மாநகரப் போக்குவரத்து கழகத்தில் முதல்முறையாக புதிதாக கொள்முதல் செய்யப்படும் பேருந்துகளின் நிறம் மாற்றப்பட உள்ளது.

    அந்த வகையில் சிவப்பு மற்றும் அடர்மஞ்சள் நிறத்திலான பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலை ஏற்படுத்தி வருகிறது.

    அதிமுக ஆட்சியில் பச்சை மற்றும் நீல நிறத்திலும் , திமுக ஆட்சியில் மகளிருக்கான விலையில்லா பேருந்து பிங்க் நிறத்திலும் , பல்வேறு கோட்ட பேருந்துகள் வெளிர்மஞ்சள் நிறத்திலும் வர்ணமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Bus Services CNG Buses Diesel Buses India News Public Transport Transport Department
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாமக-வின் 19வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு..!! ரூ.93,000 கோடி ஒதுக்கீடு..!!
    Next Article நான் நல்லா இருக்கேன்.. என்னை டிஸ்சார்ஜ் பண்ணுங்க.. பேரணியில் பங்கேற்கணும்..!! வாங்சுக் வேண்டுகோள்!
    Editor TN Talks

    Related Posts

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    July 21, 2026

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    அமெரிக்கா- ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த ஈரானிய தூதுக்குழு!

    “கர்நாடகா கழிவுநீரால் அழியும் தென்பெண்ணை!” – சாலையில் இறங்கிய விவசாயிகள்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.