கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உப்பாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 30 வாதான ராஜசேகர். இவர் கெலமங்கலம் சின்னட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராஜசேகர் தனது கடை உரிமையாளர் ராஜேஷ்குமார் மற்றும் நண்பர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி, அதனை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

அதில், நள்ளிரவில் நானும், எனது தாய் மஞ்சுளாவும் தற்கொலை செய்து கொள்கிறோம். அதற்கு காரணம் பக்கத்து வீட்டை சேர்ந்த ருத்ரப்பா என்பவரும் அவரது குடும்பத்தினரும் தான் என கூறியிருக்கிறார். அத்தோடு என்னையும், எனது தாயையும் ஒரே குழியில் புதைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ராஜசேகரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ருத்ரப்பாவுக்கும், ராஜசேகருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை பார்த்து அதிர்ந்த நண்பர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ராஜசேகரின் செல்போனை டிராக் செய்த போலீசார், சிக்னல் மூலம் தண்டரை ஏரி பகுதியில் அவர் இருப்பதை அறிந்தனர். அங்கு சென்று பார்த்தப் போது, ஏரி அருகே காரை நிறுத்திவிட்டு, தாயும், மகனும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தப் படி ஏரியில் சடலமாக மிதந்ததை கண்டனர்.

உடனே இருவரது உடல்களையும் மிட்ட போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த போலீசார், ராஜசேகரை தேடி வந்தது தெரியவந்துள்ளது. அப்போது, தாய், மகன் இருவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதை கண்டுபிடித்துள்ளனர்.

கர்நாடக போலீசார் ராஜசேகரை தேடிய காரணம், பெங்களூருவில் பியூட்டி பார்லர் நடத்தும் நளினி என்பவரை ராஜசேகர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் வேறு பெண்ணை ராஜசேகர் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்கு காதலி நளினி இடைஞ்சலாக இருப்பதால், அவரை எரித்துக் கொலை செய்துள்ளார். இது தொடர்பான புகாரில் கர்நாடக போலீசார் ராஜசேகரை தேடி வந்துள்ளனர். இதனை அறிந்த ராஜசேகர், போலீசாருக்கு பயந்து தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version