Close Menu
    What's Hot

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காதலில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு –  பெண் வீட்டார் மீது போலீசில் புகார் – கு.செல்வப்பெருந்தகை கண்டனம்
    Featured

    காதலில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு –  பெண் வீட்டார் மீது போலீசில் புகார் – கு.செல்வப்பெருந்தகை கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksApril 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 death
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுக்கோட்டை மாவட்டம் திருமலைராயபுரம் நடுப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் –  விஜயலட்சுமி தம்பதியின் மகன் ஹரிகரன். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பினை கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் முடித்துள்ளார். கடந்த 21ஆம் தேதி முதல் ஹரிஹரன் மாயமானதாக போலீசில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

    முன்னதாக ஹரிகரன் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதியும் மாயமாகி இருந்தார். விசாரணையில்  வீட்டின் அருகே உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் மாயமானது தெரியவந்தது. இந்த நிலையில் இரண்டு நாள் கழித்து இருவரும் அவரவர் பெற்றோருக்கு  தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாங்கள் தஞ்சாவூரில் இருப்பதாகவும் தெரியாமல் ஓடி வந்து விட்டதாகவும் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது எனவும் கூறி அழுதுள்ளனர் பெற்றோர்கள் அவர்களை திரும்ப வரச் சொல்லி காவல் நிலையத்தில் வைத்து சமரசம் பேசி அவரவர் பிள்ளைகளை அழைத்துச் சென்று விட்டனர்

    இதன்பின்னர் இருவரும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல், இருந்துவந்த நிலையில்தான், கடந்த 21-ஆம் தேதி முதல் ஹரிகரனை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அங்குள்ள குவாரியில் ஹரிகரனின் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலில் வெள்ளனூர் போலீசார், சடலத்தை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தங்கள் மகன் கொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு பெண் வீட்டார்தான் காரணம் எனவும் கூறி ஹரிகரனின் பெற்றோர் சடலத்தை வாங்காமல் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்திய நிலையில், சடலத்தைப் பெற்றுக் கொண்டனர். சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்தவர்கள், உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் எனக் கூறியுள்ளனர்.

    003 SPK

    சாதிய அச்சுறுத்தல் காரணமாக 20 வயது இளைஞர் உயிரிழந்துள்ள நிகழ்வில், குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விளிம்புநிலை சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹரன் மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. காதல் தொடர்பு காரணமாக சமூக மற்றும் சாதிய அழுத்தங்களுக்கு உள்ளாகி, அவர் உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி மிகவும் கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார்.

    சாதி வேறுபாடு என்ற பெயரில் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவது, மனிதநேயத்திற்கும் சமத்துவக் கொள்கைக்கும் எதிரான கொடூரமான செயலாகும். இத்தகைய சம்பவங்கள் நாகரீக காலத்தில் தற்போதும் நடைபெறுவது நம் சமூகத்தின் பின்னடைவை வெளிப்படுத்துகிறது.

    இளைஞர்கள் மீது நடத்தப்படும் சாதிய வன்கொடுமைகள், சமூக நீதிக்கு விடுக்கப்படும் பெரும் சவாலாகும். இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததே, குற்றங்கள் தொடர்வதற்கு காரணமாக அமைகிறது.

    இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கடுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

    மேலும், இவ்வாறான சாதி அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இளைஞர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொறுப்பு சமுதாயத்திற்கும் அரசுக்கும் உள்ளது.

    இச்சம்பவத்தில் உயிரிழந்த ஹரிஹரனின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதடை செய்யப்பட்ட இ-சிகரெட்!. சர்ச்சையில் RR கேப்டன் ரியான் பராக்!. வைரல் வீடியோ!
    Next Article காசியில் பிரதமர் மோடி சிறப்பு பூஜை!. அம்ரித் பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார்!
    Editor TN Talks

    Related Posts

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    July 4, 2026

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    July 4, 2026

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    திருப்பூர் : கர்ப்பிணி காதல் மனைவியை கொலை செய்த கணவர்..! தானும் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன?

    அரசு வழக்கறிஞர் நியமனம்; அமைச்சர் புஸ்சி ஆனந்த் ரூ.120 கோடி வசூல்வேட்டை – யூ டியூபர் மாரிதாஸ் பகீர் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.