ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் மாவட்டம் சோஸ்டியில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு நிலச்சரிவில் சிக்கி 120 பேர் படுகாயமடைந்துள்ளனர். 220-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து உள்ளூர் போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மச்சைல் மாதா யாத்திரை செல்லும் வழி இது நிகழ்ந்திருப்பதால் யாத்ரீகர்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version