பிரசித்தி பெற்ற சபரிமலையில் மே மாதத்திற்கு ஏற்ப நடைபெற்ற மாதாந்திர பூஜைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, ஹரிவராசனம் பாடலுடன் சாமி நடை நேற்று அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது.
மலையாள இடவம் மற்றும் தமிழ் வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு, மாதாந்திர பூஜைக்காக கடந்த மே 14 ஆம் தேதி திறக்கப்பட்டது பிரசித்தி பெற்ற சபரிமலை நடை. அன்று மாலையே 15 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நடை திறந்த மே 14ம் தேதி மாலை 5 மணி முதல் 10 மணிக்குள் 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தசனம் செய்தனர்.மறுநாள் மே 15ம் தேதி துவங்கி பக்தர்கள் வருகை 29,000, 33,000, 37,878 என்று அதிகரித்த பக்தர்கள் கூட்டம் 18ம் தேதியான ஞாயிற்றுக் கிழமை 9,982 ஆக குறைந்து .19ம் தேதி அதை விடவும் குறைந்தது.
மே 18, 19 தேதிகளில் குடியரசுத் தலைவர் சபரிமலை வருகை திட்டம் இருந்தது. இதனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பின் குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டதால் அந்த இரண்டு நாட்களில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. இதனால் அந்த இரண்டு நாட்களும் பக்தர்கள் அமையான, நீண்ட நேர தரிசனம் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.மாதாந்திர பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து ஹரிவராசனம் பாடி சார்த்தப்பட்டது.
இதையும் படிக்க: செவ்வாய்கிழமை விரதம் இருங்க.. சொந்த வீடு கட்டும் யோகம் தேடி வரும்!
இந்நிலையில் “பிரதிஷ்டா தினத்தை” முன்னிட்டு வரும் ஜூன் 4ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் சபரிமலை நடை திறக்கப்படும். ஜூன் 5-ம் தேதி”பிரதிஷ்டா தின” சிறப்பு பூஜைகள் நடக்கும்.அன்றும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி உண்டு. பின், மலையாள “மிதுனம்” மாதம் மற்றும் தமிழின் “ஆனி” மாத பூஜைக்காக ஜூன் 14ம் தேதி நடை திறக்கப்பட்டு, ஜூன் 19ஆம் தேதி வரை மாதாந்திர பூஜைகள் நடக்கும்.
இதையும் படிக்க: கடன் பிரச்சினை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி விரதம்.. கால பைரவரை எப்படி வணங்கவேண்டும் தெரியுமா?
பக்தர்கள் தரிசனத்திற்கு sabarimalaonline.org.in முன்பதிவு செய்யலாம் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.