டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதியை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதி மாலை டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான NIA விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் இதுவரை மருத்துவர்கள் உட்பட 8 பயங்கரவாதிகளை NIA கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 9வது நபரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தை சேர்ந்த யாசிர் அகமது தர் என்ற நபரை டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கார் குண்டுவெடிப்பு சதியில் யாசிர் அகமதுக்கு முக்கிய பங்கு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக NIA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய உமர் உன் நபி மற்றும் மற்றொரு குற்றவாளி முப்தி இர்பான் ஆகியோருடன் யாசிர் அகமது தொடர்பில் இருந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version