24 வயதில், பிரின்ஸ் சுக்லா (Prince Shukla) பெங்களூரில் வேலை செய்யத் தொடங்கியிருந்தபோது, சுவிட்சர்லாந்தில் இருந்து உதவித்தொகை பெற தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் கோவிட்-19 எல்லாவற்றையும் நிறுத்தியது. இதனால் பீகாரில் உள்ள தனது சிறிய கிராமத்திற்கு சென்றார்.
வீடு திரும்பிய பிரின்ஸ், பல ஆண்டுகளாக பண்ணைகளைத் தடுத்து நிறுத்தியிருந்த இடைவெளிகளைக் கண்டார். காலாவதியான நுட்பங்கள், பலவீனமான சந்தை அணுகல், தரமற்ற விதைகள் மற்றும் அடிப்படைக் கருவிகளின் கடுமையான பற்றாக்குறை ஆகியவற்றை பல இடங்களில் பல குடும்பகளால் பின்பற்றி வருவதை கண்டார்.
இதை மாற்றத் தீர்மானித்த அவர், தனது தந்தையிடமிருந்து ரூ. 1 லட்சம் கடன் வாங்கி, ‘AGRATE’ என்ற நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தின் மூலம் சிறு விவசாயிகளுக்கு தரமான விதைகள், சொட்டு நீர் பாசன முறைகள் போன்ற மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க முடிவு செய்தார்.
உபகரணங்களை வழங்குவது தீர்வின் ஒரு பகுதி மட்டுமே என்பதை பிரின்ஸ் உணர்ந்தார். ஒட்டு சாகுபடி, பல பயிர் சாகுபடி மற்றும் நிலையான விவசாய முறைகள் போன்ற மேம்பட்ட நுட்பங்களில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினார், விளைச்சலை மேம்படுத்தவும் அவர்களின் லாபத்தை இரட்டிப்பாக்கவும் அவர்களை எல்லா வகையிலும் ஆதரித்தார். அவரது முயற்சிகள் மாநில எல்லைகளைக் கூட கடந்து, மொழித் தடைகள் மற்றும் தளவாட சவால்கள் போன்ற எல்லாவற்றையும் தாண்டி ஒடிசாவில் உள்ள விவசாயிகள் மக்கானாவை பயிரிட உதவியது.
ஒரு சில ஆண்டுகளில், AGRATE 10,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஆதரித்தது. ITC, Godrej மற்றும் Parle போன்ற நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை உருவாக்கியுள்ளது. இந்த ஒத்துழைப்புகள் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், பரந்த சந்தைகளுடன் இணைக்கவும் பெரும் உதவியாக இருந்தது.
ஆரம்பத்தில் இந்த முயற்சி பலனளிக்காது என்று பலர் அவரிடம் சொல்லி இருந்தாலும் தன் விடாமுயற்சியை கைவிடாமல் தொடர்ந்து தன் நிறுவனத்தின் மூலம் பல விவசாயிகளின் வாழ்க்கையை அவர் மாற்றி இருக்கிறார்.
ரூ.2.5 கோடி வருவாய் ஈட்டியுள்ள AGRATE நிறுவனம் நமக்கு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுக்கிறது. “தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றம் வீட்டிலிருந்தே சில சமயம் தொடங்கும்.ஒரு இளைஞன் தனது கிராமத்திற்குத் திரும்பியதில் தொடங்கிய சிறிய விஷயம், இப்போது ஒரு பெரிய இயக்கமாக மாறியுள்ளது. எனவே சிறிய யோசனை இது சிறிய விஷயம் என்று நாம் இன்று தள்ளி போடும் ஒன்று நாளை பெரிய மாற்றத்தை இந்த சமுதாயத்தில் கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளது. எனவே சிந்தித்து செயல்படுங்கள்”.
