Close Menu
    What's Hot

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    நோ பெட்ரோல்… நோ பொல்யூஷன்… இன்று உலக சைக்கிள் தின ஸ்பெஷல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»நடிகர் திலீப் குற்றவாளி இல்லை!. பிரபல நடிகை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
    இந்தியா

    நடிகர் திலீப் குற்றவாளி இல்லை!. பிரபல நடிகை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

    Editor web3By Editor web3December 8, 2025Updated:December 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    actor dileep
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரபல தமிழ் நடிகை வழக்கில் மலையாள நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

    ஒரு காலத்தில் மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு இணையாக கருதப்பட்ட முன்னணி நடிகர் திலீப். பாடகர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். மலையாள ரசிகர்களால் ‘ஜனப்பிரிய நாயகன்’ என்று அழைக்கப்பட்டவர் திலீப். இந்தச் சூழலில்தான், பிரபல மலையாளம், தமிழ் நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் செல்லும்போது அந்த நடிகையை ஆறு நபர்கள் கடத்தியுள்ளனர். பல்சர் சுனில் என்ற நபர் நடிகையைப்  பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அதை வீடியோவாக எடுத்து பிளாக்மெயில் செய்யவும் பல்சர் சுனில் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. காரில் கடத்தப்பட்ட அந்த நடிகை, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு இயக்குநர் வீட்டின் அருகே விடப்பட்டார். அன்றைய தினமே அந்த நடிகை போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார்.

    இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கொச்சி போலீஸார், பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில் உட்பட 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியதாகப் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை மற்றும் இந்த விவகாரம் தொடர்புடைய சர்ச்சைகளால் திலீப்பின் கரியரும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

    குற்றச் சதி, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதியப்பட்டது. ஐடி சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில் திலீப் தான் இந்த வன்கொடுமையைத் திட்டமிட்டே நடத்தியதாகக் கூறப்பட்டது.. அவருக்கும் அந்த நடிகைக்கும் முன்கூட்டியே பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே திலீப் இதைத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது

    கடந்த 2020 ஆம் ஆண்டில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுவரை 1600 ஆவணங்கள், 280 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், நடிகை தொடர்ந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாத்தால் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் நடிகையின் கார் டிரைவர் அந்தோணி உள்பட குற்றம்சாட்டப்பட்ட A1 – A6 ஆகியோர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    acquitted actor assault and abduction case actor dileep Kerala actor rape case
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமிகப்பெரிய சிக்கலுக்கு வழிவகுக்கும்; நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
    Next Article முக்கிய சாலைக்கு அதிபர் டிரம்ப் பெயர் சூட்டுகிறது தெலுங்கானா அரசு
    Editor web3
    • Website

    Related Posts

    எரிபொருள் சிக்கன நடவடிக்கை..!! புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு சுற்றறிக்கை..!!

    June 3, 2026

    முதல்வருக்கு மகளின் திருமண அழைப்பிதழ் தந்த சுந்தர் சி- குஷ்பு!

    June 3, 2026

    நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா மந்தனா..! ஒரே படத்திற்கு ரூ.15கோடியா?

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    நோ பெட்ரோல்… நோ பொல்யூஷன்… இன்று உலக சைக்கிள் தின ஸ்பெஷல்!

    போதை பொருட்களுக்கு ஃபுல் ஸ்டாப்..!! மாஸ் காட்டும் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்..!!

    சொத்து விவரத்தை மறைத்தாரா எடப்பாடி பழனிசாமி? வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.