Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»மேற்குவங்கத்தில் மீண்டும் பெண் முதலமைச்சர்!. பாஜக மாஸ்டர் பிளான்!
    இந்தியா

    மேற்குவங்கத்தில் மீண்டும் பெண் முதலமைச்சர்!. பாஜக மாஸ்டர் பிளான்!

    Editor web3By Editor web3May 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bjp candidate
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 206 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, பாஜக இந்த மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவாதம் டெல்லி வரை எதிரொலிக்கிறது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் சுவேந்து அதிகாரி, மாநில முன்னாள் தலைவர் திலீப் கோஷ் மற்றும் சமித் பட்டாச்சார்யா ஆகியோர் முன்னிலையில் இருந்தாலும், ஒரு பெண்ணை முதலமைச்சராக நியமிக்க பாஜக மேலிடம் விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    குறிப்பாக, எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக எழுப்பிய விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஒரு பெண்ணை முதலமைச்சராக அமர்த்தப் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, மாநில அளவில் மிகவும் பிரபலமான அக்னிமித்ரா பால் மற்றும் ரூபா கங்குலி ஆகியோரின் பெயர்கள் முதலமைச்சர் ரேஸில் பலமாக அடிபடுகின்றன. மேற்குவங்கத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு பெண் முதலமைச்சரை நியமிப்பதன் மூலம், பெண்களின் ஆதரவைத் தக்கவைக்கவும், அகில இந்திய அளவில் கட்சியின் பிம்பத்தை உயர்த்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசிக்க, சுவேந்து அதிகாரி மற்றும் சமித் பட்டாச்சார்யா ஆகியோரை டெல்லியில் தங்கியிருக்குமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் உள்ளிட்டோர் பங்கேற்கும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, மேற்குவங்கத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. மம்தா பானர்ஜியின் கோட்டையைத் தகர்த்துள்ள பாஜக, வரும் மே 9-ம் தேதி (ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள்) அன்று புதிய அரசு பதவியேற்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதலைநகரில் பரபரப்பு!. ரிசர்வ் வங்கி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!
    Next Article விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருக்காது: தமிழிசை சௌந்தரராஜன்
    Editor web3
    • Website

    Related Posts

    பெங்களூரு ஐடி நிறுவன கிரெச்சில் குழந்தைகள் சித்ரவதை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

    July 2, 2026

    இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து – பிரதமர் மோடி அறிவிப்பு

    July 2, 2026

    இனி சண்டை வேண்டாமே.. ப்ளீஸ்..!! மோடி – ஷெபாஸ் ஷெரீப்பிற்கு 117 முக்கிய பிரமுகர்கள் கடிதம்..!!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.