Close Menu
    What's Hot

    போராட்டமின்றி மதுக்கடைகளை அகற்றிய முதல் அரசு தவெக தான்.. அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்..!!

    என்னை நீக்க அதிகாரம் இல்லை.. தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பரபரப்பு பேட்டி..!!

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறி பி.வி. சிந்து அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»அத்தியாவசிய பொருட்கள் மீது செஸ் வரி இல்லை.. குட் நியூஸ் சொன்ன நிர்​மலா சீதா​ராமன்
    இந்தியா

    அத்தியாவசிய பொருட்கள் மீது செஸ் வரி இல்லை.. குட் நியூஸ் சொன்ன நிர்​மலா சீதா​ராமன்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nirr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் மீது சுகாதார, தேசிய பாது​காப்பு செஸ் வரி விதிக்​கப்​ப​டாது என்று மத்திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் விளக்​கம் தெரிவித்துள்​ளார்.

    மக்​களவை​யில் விவாதத்​துக்​காக சுகா​தா​ரப் பாது​காப்பு மற்​றும் தேசிய பாதுகாப்பு செஸ் வரி மசோ​தாவை (2025) அறி​முகப்​படுத்தி நிதி​யமைச்​சர் பேசி​ய​தாவது:

    சுகா​தா​ரம், தேசிய பாது​காப்பு வரி மக்​கள் அன்​றாடம் பயன்​படுத்​தும் அத்​தி​யா​வசிய பொருட்​களின் மீது விதிக்​கப்​ப​டாது. மாறாக பான் மசாலா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்​கக்​கூடிய பொருட்​களின் மீது இந்த வரி விதிக்​கப்​படும்.

    இந்த செஸ் வரியை விதிப்​ப​தன் மூலம் நாட்​டில் பான் மாசலா நுகர்வை பெரு​மளவு தடுக்க முடி​யும் என்​பதே எங்​களின் எதிர்பார்ப்​பு. இந்த வரி விதிப்​பால் கிடைக்​கும் வரு​வாயி​லிருந்து குறிப்​பிட்ட சில சுகா​தார திட்​டங்​களின் கீழ் மாநிலங்​களுக்கு நிதி பகிர்ந்​தளிக்​கப்​படும். குறிப்​பாக, பான் மசாலா மீது விதிக்கப்படும் வரு​வாயி​லிருந்து கிடைக்​கும் ஒரு பகுதி சுகா​தார விழிப்புணர்​வு, பிற சுகா​தா​ரம் தொடர்​பான திட்​டங்​கள் மற்​றும் செயல்பாடு​கள் மூலம் மாநிலங்​களு​டன் பகிர்ந்து கொள்​ளப்​படும்.

    பான்​ம​சாலா போன்ற பொருட்​கள் மீது விதிக்​கப்​படும் 40% ஜிஎஸ்டி தொடரும். அதில் மாற்​ற​ம் இல்​லை. அதற்கு மேல் இந்த சுகா​தார, தேசிய பாது​காப்பு வரி​யானது விதிக்​கப்​படும். பான் மாசாலா உற்​பத்​தி​யாளர்​களின் உற்​பத்தி திறன் அடிப்​படை​யில் இந்த வரி விதிப்பு இருக்​கும். இதன் மூலம், நாட்​டின் சுகா​தா​ரம், தேசிய பாது​காப்​புக்கு தேவை​யான நிதி உறுதி செய்​யப்​படும்.

    பான் மசாலா மீது கலால் வரி விதிக்க முடி​யாது என்​ப​தால் பான் மசாலா உற்​பத்தி ஜிஎஸ்​டி​யுடன் சேர்த்து வரி விதிக்​கப்​படுவதை உறுதி செய்​வதற்​காக அரசு ஒரு தனி செஸ் வரி மசோ​தாவை இப்போது கொண்டு வந்​துள்​ளது.

    இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜப்பானில் ஜன.16-ல் வெளியாகிறது ‘புஷ்பா 2’
    Next Article சேகர் பாபு மீது திமுக எம்எல்ஏக்கள் அதிருப்தி?
    Editor TN Talks

    Related Posts

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

    July 18, 2026

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம்-1..!!

    July 18, 2026

    மோசமாகும் உடல்நிலை..!! உண்ணாவிரதம் இருந்த வாங்சுக் வலுக்கட்டாயமாக ஹாஸ்பிடலில் அட்மிட்..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போராட்டமின்றி மதுக்கடைகளை அகற்றிய முதல் அரசு தவெக தான்.. அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்..!!

    என்னை நீக்க அதிகாரம் இல்லை.. தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பரபரப்பு பேட்டி..!!

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறி பி.வி. சிந்து அசத்தல்!

    ஈரான் மீது 7-வது நாளாக தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்!

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.