கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் லியோனல் மெஸ்ஸியின் நிகழ்வின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வருகை தந்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, இன்று காலை கொல்கத்தா சால்ட் லேக் டவுனில் அமைக்கப்பட்ட 70 அடி உயர மெஸ்ஸி சிலையை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். மெஸ்ஸியை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கை தட்டி வரவேற்றனர். அங்கு அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

மெஸ்ஸியை பிரபலங்கள் சூழ்ந்ததால், நேரில் பார்க்க முடியாமல் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மமதா பானர்ஜி, “சால்ட் லேக் மைதானத்தில் நடந்த மோசமான ஏற்பாட்டிற்கு நான் மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்தேன். மெஸ்ஸி மற்றும் கால்பந்து ரசிகர்களிடம் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு மிகவும் பிடித்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி. அவரை ஒரு முறையாவது காண வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த நிலையில் நானும் ஸ்டேடியம் நோக்கி சென்று கொண்டிருந்தேன்.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து, லியோனல் மெஸ்ஸியிடமும், அவரது ரசிகர்களிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும், பொறுப்புகளை நிர்ணயிக்கவும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், நான் ஓய்வு பெற்ற நீதிபதி அஷிம் குமார் ராய் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளேன். இந்தக் குழு சம்பவத்தை விரிவாக விசாரணை செய்து, பொறுப்பை நிர்ணயம் செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கைகளை பரிந்துரைக்கும்.” என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version