Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20: இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

    நீர்கொழும்பு சிறையில் பயங்கர மோதல்!. போலீஸ் அதிகாரிகள் உட்பட 30 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா; நினைவு நாணயம், தபால் தலை வெளியீடு!
    இந்தியா

    ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா; நினைவு நாணயம், தபால் தலை வெளியீடு!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Coin and postage stamp of Sri Sathya Sai Baba released
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரின் நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தியில் வாழ்ந்த மகான் ஸ்ரீ சத்ய சாய் பாபா, 1926ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்தார். இந்தநிலையில், அவரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (நவ. 19) புட்டபர்த்தி வந்தார். ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதிக்கு சென்ற பிரதமர் மோடி, பிரார்த்தனை செய்தார்.

    இதையடுத்து, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில், சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கவுரவிக்கும் வகையில் நினைவு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

    விழாவில் பேசிய பிரதமர் மோடி, சத்ய சாய்பாபா நம்முடன் இல்லையென்றாலும், அவரின் போதனைகள் மற்றும் அன்பு, சேவை மனப்பான்மை ஆகியவை உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கானவர்களை வழிநடத்துவதாக குறிப்பிட்டார். சாய்பாபாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தும் பாக்கியம் தனக்கு கிடைத்திருப்பதாகவும், புட்டபர்த்தியின் புனித பூமியில் இருப்பது ஒரு சிறந்த ஆன்மிக அனுபவம் என்றார். ஸ்ரீ சத்ய சாய் பாபாவை கவுரவிக்கும் வகையில் ரூ.100 சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட்டது அரசிற்கு கிடைத்த ஒரு மரியாதை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    விழாவில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு, கிஷண் ரெட்டி, மாநில அமைச்சர்கள், கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“நான் தேர்தலில் போட்டியிடாதது தவறு; எனது முயற்சி தொடரும்” – பிரசாந்த் கிஷோர்
    Next Article சர்ச்சைக்குள்ளான தனுஷ் விவகாரம்: மான்யா ஆனந்த் விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    July 6, 2026

    ஜம்மு – காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு!. மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்!

    July 6, 2026

    மோகன்லாலிடம் 10 யானைத் தந்தங்கள், 13 தந்தச் சிலைகள்

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20: இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

    நீர்கொழும்பு சிறையில் பயங்கர மோதல்!. போலீஸ் அதிகாரிகள் உட்பட 30 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

    மு.க.ஸ்டாலின் பெயர்தாங்கிய கல்வெட்டு அகற்றம்;  திமுக போராட்டம் அறிவிப்பு  

    “அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பது ஏன்?” – அமைச்சர் ராஜ்மோகனுக்கு சீமான் கேள்வி 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.