கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வந்த மாணவிக்கு காதல் சில்மிஷம் செய்த கம்ப்யூட்டர் பயிற்சி மைய உரிமையாளர். கம்ப்யூட்டர் பயிற்சி மைய உரிமையாளரை கடுமையாக தாக்கி போலீசில் ஒப்படைத்த மாணவியின் உறவினர்கள்.
தெலுங்கானா மாநிலம் விகாரபாத் நகரில் நவாஸ் என்பவர் பிரைன் ட்ரீ கம்ப்யூட்டர் ட்ரைனிங் சென்டர் என்ற பெயரில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் கற்றுக் கொள்வதற்காக வந்த மாணவி ஒருவரிடம் நவாஸ் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
நவாஷின் சில்மிஷ லீலைகள் பற்றி அந்த மாணவி பெற்றோரிடம் கூறிய நிலையில் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கு வந்த மாணவியரின் உறவினர்கள் நவாஷை கடுமையாக தாக்கினர். அவருடைய ஆடைகளும் கிழிக்கப்பட்டன.
இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக வேறொருவர் வந்து பேசினார். அவரையும் கடுமையாக எச்சரித்த மாணவியின் உறவினர்கள் நவாசை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவர் வர மறுத்து விட்டார்.
எனவே அவர்கள் போலீசாருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் நவாஷை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நவாஸ் இதற்கு முன்னரும் இதே போன்ற செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
