18 ஆண்டுகால ஏக்கம் முடிவுக்கு வந்ததாகவும், இத்தனை ஆண்டுகாலம் ஆர்சிபி அணிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த பெங்களூர் அணியின் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக கொள்வதாகவும், இன்றிரவு ஒரு குழந்தையைப் போல் நிம்மதியாக தூங்குவேன் என்றும் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.
சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றிய பின்னர் மேத்யூ ஹைடன், விராட் கோலியிடம் பேட்டி எடுத்தார். அப்போது பேசிய விராட், என்னுடைய இளமையில் பெங்களூர் அணிக்கு வந்தேன், என்னுடைய மிகச்சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தின் போதும் இங்கு தான் இருந்தேன், என்னுடைய அனுபவத்தின் சாரம் சேர்ந்த போதும் இங்கு தான் விளையாடினேன். ஆனால் சாம்பியன் பட்டம் பெற முடியவில்லையே என்ற ஏக்கம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது.
இத்தனை ஆண்டுகாலம் எவ்வளோ தோல்விகள் அடைந்தபோதும், அணியில் அதிகப்படியான ரன்கள் குவித்த போதும் ஆர்சிபி ரசிகர்கள் எங்களை கை விட்டதே இல்லை. இந்த வெற்றி உண்மையில் அவர்களுக்கானது. இன்றிரவு அவர்களோடு சேர்ந்து நானும் ஒரு குழந்தையைப் போல் நிம்மதியாக தூங்குவேன் என்றார்.
