துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர், உடல்நிலைக் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 9-ம் தேதி துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா மாநில ஆளுநரும், கோவையை சேர்ந்தவருமான சி.பி.ராதா கிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

நேற்று அவரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.,களுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்கான நாடாளுமன்ற குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சி.பி.ராதாகிருஷ்ணனை கூட்டணி கட்சி எம்.பி.,களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அவர், “சி.பி.ராதாகிருஷ்ணன் பண்பானவர், பணிவானவர். எந்த சர்ச்சைக்கும் ஆளாகாதவர். ஊழல்கறை இல்லாதவர். எளிமையான வாழ்க்கை வாழ்கிறவர். எனவே அவரை அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிரதமர் மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் என பலர் பங்கேற்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version