காங்கிரஸ் கட்சியின் 141ம் ஆண்டு ஸ்தாபன நாள், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தில் இந்தியா சிக்கி இருந்தபோது, 1885-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. இதையடுத்து சுமார் 50 ஆண்டுக்கும் மேலாக கோடிக்கணக்கான மக்களை திரட்டி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்களின் தலைமையில் அகிம்சா வழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி, நாட்டுக்கு காங்கிரஸ் கட்சி சுதந்திரத்தை பெற்று தந்தது.

இத்தகைய பெருமைக்குரிய காங்கிரஸ் கட்சி, தொடங்கப்பட்டு இன்று 141-ம் ஆண்டு ஆகிறது. இது காங்கிரஸ் கட்சியால் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று (டிச.28) காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னையில் கொண்டாட்டம்: இந்திய தேசிய காங்கிரஸின் 141-வது நிறுவன நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்சிக் கொடியை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கு.செல்வ பெருந்தகை MLA ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

செல்வ பெருந்தகை எக்ஸ் தளப் பதிவு: இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் 141-ம் ஆண்டு ஸ்தாபன நாளையொட்டி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை, தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “இந்திய தேசிய காங்கிரஸின் 141-வது ஸ்தாபன நாள்! நூற்றாண்டு கடந்தும் குறையாத தேசப்பற்று! தமிழ்நாடு காங்கிரஸ் பெருமிதம் கொள்கிறது..” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version