பெற்ற தந்தைக்கே துரோகம் செய்பவர், இயக்கத்தை, மக்களைக் காப்பாற்றுவாரா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: எனக்கு வயதாகிவிட்டது, புத்தி பேதலித்து விட்டது, சுயநினைவு இல் லாமல் பேசுகிறார் என்றெல்லாம் அன்பு மணி கும்பலைச் சேர்ந்த சிலர் அசிங் கப்படுத்துகிறார்கள். அதை தாங்கும் சக்தி எனக்குள்ளது. ஆனால், என் உழைப்பில் உருவான கட்சியை தயவு செய்து காயப்படுத்தாதீர்கள்.
அன்புமணிக்கு எம்.பி., மத்திய அமைச்சர், தேர்தலில் தோற்ற பிறகும் ராஜ்யசபா எம்.பி. என எல்லாமே கொடுத்தோம். ஆனால், அவர் தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை. மக்களுக்கு உழைக்கவில்லை.
ஒரு காலத்தில் பாமகவுக்கு 20 எம்எல்ஏ-க்கள் இருந்தனர். தற்போது கட்சி அங்கீகாரத்தை இழந்து நிற்கிறது. என்னை ஏமாற்றியவர்களை மன்னிப்பேன். ஆனால், என்னை நம்பி வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏமாற விடமாட்டேன். நான் உரு வாக்கிய பாமகவைப் பாதுகாக்கவே வரும் 29-ம் தேதி (நாளை) சேலத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. அது சாதாரண கூட்டம் அல்ல. பாமகவின் மறுபிறப்பு.
வரும் தேர்தலில் 25 தொகுதி களில் வெற்றி பெற்று, நமது கட்சியின் சின்னம், இழந்த அங்கீகாரத்தை மீட்க வேண்டும். அன்புமணியுடன் இருந்து ஏமாறாதீர்கள். பெற்ற தந்தைக்கே துரோகம் செய்பவர், இந்த இயக்கத்தையோ, மக்களையோ காப்பாற்றுவாரா? நான் நம்பிய சிலர் என்னை ஏமாற்றினாலும், என் மக்கள் என்னுடன் நிற்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
