டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஹாரி புருக் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆசஸ் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதில் 4வது ஆசஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஹாரி புருக் 34 பந்துகளில் 41 ரன்களை விளாசினார்.

இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் அவர் 3,000 ரன்களை கடந்தார். மொத்தம் 3,468 பந்துகளை எதிர்கொண்டு அவர் 3,000 ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு, 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் உலக சாதனையை ஹாரி புருக் படைத்தார்.

அதேபோல், குறைந்த இன்னிங்ஸ்களில் (57 இன்னிங்ஸ்) விளையாடி 3,000 ரன்களை கடந்த 2வது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் புரிந்தார்.

இந்தப் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் மறைந்த ஜாம்பவான் டான் பிராட்மேன் முதலிடத்தில் உள்ளார். அவர் மொத்தம் 33 இன்னிங்ஸ்களில் விளையாடி 3,000 ரன்களை கடந்துள்ளார். 2வது இடத்தில் இன்னொரு இங்கிலாந்து வீரர் காம்ப்டன் உள்ளார். அவர் 57 இன்னிங்ஸ்களில் 3,000 ரன்களை எடுத்துள்ளார். இவருடன் ஹாரி புருக் சாதனையை பகிர்ந்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version