Close Menu
    What's Hot

    உஷார்!. Nestle குழந்தைகளுக்கான உணவில் ஆபத்தான நச்சு!.  25 நாடுகளில் தயாரிப்புகளை திரும்பப் பெற்றது!.

    வெனிசுலா நெருக்கடி!. மிகுந்த கவலை தெரிவித்த ஜெய்சங்கர்!.

    பொங்கல் பரிசு தொகுப்பில் குறையா?. புகார் எண்கள் அறிவிப்பு!. தமிழக அரசு அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»டெல்லி கலவர வழக்கு: உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு
    இந்தியா

    டெல்லி கலவர வழக்கு: உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    supreme court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லி கலவர வழக்கில் மூளையாகச் செயல்பட்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாமுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. அதேநேரத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் கலவரமாக மாறின. இதில், 53 பேர் உயிரிழந்தனர், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த வழக்கில், கலவரத்தை திட்டமிட்டு கட்டமைத்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா, ஷாலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்கள், நடந்த கலவரத்தில் முக்கிய பாத்திரங்களை வகித்தது முதற்கட்ட பார்வையில் தெரியவந்துள்ளதாகக் கூறி ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டது.

    இதையடுத்து, உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான், ஷதாப் அகமது ஆகியோர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களின் மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று தனது தீர்ப்பை வழங்கியது.

    சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் (UAPA), ஜாமீனுக்கான வரம்பு அதிகமாக உள்ளது. அனைத்து மேல்முறையீட்டாளர்களும் குற்றத்தின் அடிப்படையில் சமமான நிலையில் இல்லை என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன. எனவே, ஒவ்வொரு மேல்முறையீட்டையும் தனித்தனியாக ஆராய்வது அவசியமாகிறது. மற்ற குற்றவாளிகளுடன் ஒப்பிடும்போது, உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளனர்.

    உமர் காலித் மற்றம் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு எதிராக முதல்நிலை குற்றச்சாட்டுக்கள் இருப்பதற்கான ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பித்துள்ளது. இதில், நீதிமன்றம் திருப்தி அடைகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணையின் இந்த கட்டத்தில் அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது நியாயமற்றது.

    அதேநேரத்தில், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான், ஷதாப் அகமது ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுவதால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை அது நீர்த்துப்போகச் செய்யாது. சில கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டே அவர்களை ஜாமீல் விடுவிக்க வேண்டும். நிபந்தனைகளை அவர்கள் மீறினால் அவர்களது ஜாமீன ரத்து செய்யப்படும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎல்.கணேசன் மறைவு! வைகோ இரங்கல்
    Next Article வெனிசுலாவில் அமெரிக்க இராணுவத்தின் கொடூரம்!. 32 கியூப அதிகாரிகள் கொல்லப்பட்டனர்!
    Editor TN Talks

    Related Posts

    வெனிசுலா நெருக்கடி!. மிகுந்த கவலை தெரிவித்த ஜெய்சங்கர்!.

    January 7, 2026

    திடீர் உடல்நலக்குறைவு!. சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

    January 6, 2026

    டிரம்பின் ஆதரவாளர் மோடி; ஜனநாயகத்திற்கும், பாஜகவுக்கும் ஆபத்து!. சுப்ரமணிய சுவாமி விமர்சனம்!.

    January 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உஷார்!. Nestle குழந்தைகளுக்கான உணவில் ஆபத்தான நச்சு!.  25 நாடுகளில் தயாரிப்புகளை திரும்பப் பெற்றது!.

    வெனிசுலா நெருக்கடி!. மிகுந்த கவலை தெரிவித்த ஜெய்சங்கர்!.

    பொங்கல் பரிசு தொகுப்பில் குறையா?. புகார் எண்கள் அறிவிப்பு!. தமிழக அரசு அதிரடி!

    இந்தியா வர மறுக்கும் வங்கதேசம்!. எச்சரிக்கை விடுத்த ஜெய்ஷா!

    வாடிவாசலுக்கு ரெடியா?. ஜல்லிக்கட்டு முன்பதிவு இன்று தொடக்கம்!.

    Trending Posts

    “வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம்!” – சாரா அர்ஜுன் நெகிழ்ச்சி

    January 6, 2026

    தங்கம் விலை மேலும் ரூ.560 உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    January 6, 2026

    உஷார்!. Nestle குழந்தைகளுக்கான உணவில் ஆபத்தான நச்சு!.  25 நாடுகளில் தயாரிப்புகளை திரும்பப் பெற்றது!.

    January 7, 2026

    வெனிசுலா நெருக்கடி!. மிகுந்த கவலை தெரிவித்த ஜெய்சங்கர்!.

    January 7, 2026

    பொங்கல் பரிசு தொகுப்பில் குறையா?. புகார் எண்கள் அறிவிப்பு!. தமிழக அரசு அதிரடி!

    January 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.