Close Menu
    What's Hot

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    பாக்.-ல் பொருளாதார நெருக்கடி..!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்ற அவலம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணம்!. பிரதமர் மோடிக்கு அழைப்பு?
    சினிமா

    விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணம்!. பிரதமர் மோடிக்கு அழைப்பு?

    Editor web3By Editor web3February 25, 2026Updated:February 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wedding Of Virosh PM Modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடியின் திருமண கொண்டாட்டங்கள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று (பிப்ரவரி 25) கலைகட்டியுள்ளன. பல ஆண்டுகளாகத் தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி, கடந்த பிப்ரவரி 22 அன்று சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தனர். ரசிகர்களால் சூட்டப்பட்ட ‘விரோஷ்’ என்ற பெயரையே தங்கள் திருமணத்திற்கு “தி வெடிங் ஆஃப் விரோஷ்” (The Wedding of VIROSH) எனச் சூட்டி அவர்கள் நெகிழ்ச்சியூட்டினர்.

    உதய்பூரில் உள்ள ‘தி மெமெண்டோஸ்’ (The Mementos) என்ற பிரம்மாண்ட சொகுசு விடுதியில் இவர்களது திருமணச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. நேற்று (பிப். 24) மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், இன்று ஹல்தி வைபவம் மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்தத் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 50 முதல் 100 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். ஆச்சரியமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தத் தம்பதிக்குத் தனது வாழ்த்து மடலை அனுப்பி கௌரவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

    நாளை (பிப்.26) காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் திருமணம் நடைபெற உள்ளது. விஜய்யின் தெலுங்கு கலாச்சாரப்படி ஒரு சடங்கும், ராஷ்மிகாவின் குடகு  பாரம்பரியப்படி ஒரு சடங்கும் என இருமுறை இவர்கள் மாலை மாற்றிக்கொள்ள உள்ளனர். இந்தநிலையில் இவர்களது திருமணத்துக்கு விஜய் தேவரகொண்டாவின் தந்தை கோவர்தன் ராவ் பிரதமர் மோடியை அழைத்துள்ளார். ஆனால் அவர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளதால் இவர்களது திருமணத்தில் அவர் பங்கேற்கமாட்டார். இதனால் அவர்களுக்கு வாழ்த்து கடிதத்தை பிரதமர் அனுப்பியுள்ளார். அதில் அவர்களின் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கவேண்டும், என்றும் வாழ்நாள் முழுவதும் இருவரும் நண்பர்களாக இருக்கவேண்டும் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார்.

    Rashmika Mandanna Vijay Deverakonda ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!
    Next Article மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!
    Editor web3
    • Website

    Related Posts

    ரஜினியின் பெயர், படங்களை அரசியலில் பயன்படுத்தக்கூடாது..!! ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை..!!

    June 13, 2026

    ஐயோ அது நான் இல்லை… ஏமாந்துறாதீங்க – நடிகை மீனாட்சி சவுத்ரி

    June 13, 2026

    நடிகையின் காலில் விழுந்த மிஷ்கின்; காரணம் என்ன?

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    பாக்.-ல் பொருளாதார நெருக்கடி..!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்ற அவலம்..!!

    இந்திய ராணுவத்தின் புதிய கமாண்டராக தீரஜ் சேத் நியமனம்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

    ரஜினியின் பெயர், படங்களை அரசியலில் பயன்படுத்தக்கூடாது..!! ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.