Close Menu
    What's Hot

    6 மாசம்னு சொன்னாங்க.. ஆனா 6 நாள் கூட அமைதியா இல்ல..!! திருச்சியில் முதல்வர் விஜய் ‘தெறி’ பேச்சு..!!

    முழு டிஜிட்டல் மயம்.. தொடங்கியாச்சு மக்கள்தொகை கணக்கெடுப்பு..!! தமிழ்நாட்டில் எப்போ தெரியுமா..??

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சித்தராமையாவுக்கு வீட்டில் விருந்து வைத்த டி.கே சிவகுமார்… முதலமைச்சர் பதவி பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?
    இந்தியா

    சித்தராமையாவுக்கு வீட்டில் விருந்து வைத்த டி.கே சிவகுமார்… முதலமைச்சர் பதவி பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ktk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் பதவி தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தனது வீட்டில் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் விருந்து வைத்திருப்பது, அந்த மாநில அரசியலில் திடீர் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

    கர்​நாட​கா​வில் சித்​த​ராமையா முதல்​வராக பதவி​யேற்று இரண்டரை ஆண்​டு​கள் நிறைவடைந்த நிலை​யில், துணை முதல்வர் டி.கே.சிவகு​மாருக்கு முதல்​வர் பதவி வழங்க வேண்​டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்​கொடி உயர்த்தினர்.

    இதனால், காங்​கிரஸ் மேலிடத்​துக்கு கடும் நெருக்​கடி ஏற்​பட்​டது. காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, கட்​சி​யின் மூத்த தலை​வர்​களான சோனியா காந்​தி, ராகுல் காந்​தி, பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், மேலிட பொறுப்​பாளர் ரன்​தீப் சிங் சுர்​ஜே​வாலா ஆகியோரிடம் ஆலோ​சனை நடத்​தி​னார்.

    இதனையடுத்து கடந்த நவ.30 அன்று முதல்வர் சித்தாரமையாவின் வீட்டுக்கு வருகை தந்த துணை முதல்வர் டி.கே.சிவகு​மார் அங்கு காலை உணவு சாப்பிட்டார். பின்​னர் இரு​வரும் தனி​யாக 15 நிமிடங்​கள் ஆலோ​சனை நட‌த்​தினர். அதன் பிறகு ‘தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை’ என இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், இன்று (டிச.2) மீண்டும் சித்தராமையா, சிவகுமார் இருவரும் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டுள்ளனர். இந்த முறை சிவகுமாரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்கு வருகை தந்துள்ளார் சித்தராமையா. அங்கு அவருக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது டி.கே. சிவகுமாரின் சகோதரரும் முன்னாள் எம்.பி.யுமான டி.கே. சுரேஷும் உடன் இருந்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு, கர்நாடக காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசலைக் குறைப்பதற்கான முயற்சியாக எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது.

    இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர், “இரு தலைவர்களும் மீண்டும் சேர்ந்து காலை உணவு அருந்துவது வரவேற்கத்தக்கது. கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் குழப்பங்களுக்கு ஒரு அமைதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.” என்று கூறியுள்ளார்.

    கட்சியில் நிலவும் இந்தக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரைவில் டெல்லியில் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். “தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க டெல்லியில் முக்கியத் தலைவர்களை அழைத்துப் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கார்கே தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleSIR-ஐ எதிர்த்து அமளி… நாடாளுமன்றம் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
    Next Article டிட்வா புயலால் சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு: தமிழக அரசு
    Editor TN Talks

    Related Posts

    35 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!. மே.வங்க அமைச்சரவையின் பலம் 41 ஆக உயர்வு!

    June 1, 2026

    டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை: பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய UPI அம்சம் அறிமுகம்..!!

    June 1, 2026

    12-ஆம் வகுப்பு விடைத்தாள் கசிவு: தொழில்நுட்பக் கோளாறை ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    6 மாசம்னு சொன்னாங்க.. ஆனா 6 நாள் கூட அமைதியா இல்ல..!! திருச்சியில் முதல்வர் விஜய் ‘தெறி’ பேச்சு..!!

    முழு டிஜிட்டல் மயம்.. தொடங்கியாச்சு மக்கள்தொகை கணக்கெடுப்பு..!! தமிழ்நாட்டில் எப்போ தெரியுமா..??

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.