Close Menu
    What's Hot

    ஜி7 உச்சிமாநாடு.. ‘அன்புள்ள நண்பர் நரேந்திரா…’!. இந்தியில் கூறிய மக்ரோன்!.

    தென் கொரியாவை சாய்த்த மெக்ஸிகோ!. உலகக்கோப்பை களத்தில் விறுவிறுப்பு!

    ஃபிஃபா அப்டேட் : செக் குடியரசு – தென்னாப்ரிக்கா இடையிலான போட்டி டிரா..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»“சாதி பற்றி பேசினால் உதைப்பேன்!” பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் நிதின் கட்கரி ஆவேசம்!.
    இந்தியா

    “சாதி பற்றி பேசினால் உதைப்பேன்!” பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் நிதின் கட்கரி ஆவேசம்!.

    Editor web3By Editor web3May 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Nitin Gadkari over fuel prices
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாக்பூரில் நடைபெற்ற மே தின விழாவில்  கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சாதி மற்றும் மத அரசியலைக் கடுமையாகச் சாடினார். அத்தியாவசியப் பொருட்களின் விலை அனைவருக்கும் சமமாக இருக்கும்போது, அரசியலில் மட்டும் ஏன் சாதிப் பிரிவினை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து பேசிய கட்கரி, “இங்கே இந்துக்களுக்கு ஒரு விலை, முஸ்லிம்களுக்கு ஒரு விலை என்று பெட்ரோல், டீசல் அல்லது சமையல் எரிவாயு விற்கப்படுவதில்லை. அனைவருக்கும் ஒரே விலைதான். அப்படியிருக்கும்போது எதற்காகச் சாதி மற்றும் மத ரீதியான பிரிவினைகளை உருவாக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் காலங்களில் மதம் மற்றும் சாதி சார்ந்த பிரச்சாரங்கள் அதிகரித்து வரும் சூழலில் அவரது இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

    சாதி அரசியல் செய்பவர்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்த கட்கரி, “யாராவது என்னிடம் வந்து சாதி பற்றிப் பேசினால், அவர்களை ஓங்கி உதைப்பேன்” என்று கூறினார். பொதுவெளியில் சாதி கோஷங்களை எழுப்பும் தலைவர்கள் பலர், தனிப்பட்ட முறையில் தனது வீட்டிற்கு வந்து தங்களது வாரிசுகளுக்கோ அல்லது மனைவியுக்கோ சீட் கேட்டு ரகசியமாகப் பேசுவதாகவும், அவர்களைப் போன்ற “வேஷதாரிகள்” தனக்குத் தேவையில்லை என்றும் அவர் பகிரங்கமாகச் சாடினார்.

    சமூகத்தில் சாதிப் பிரிவினைகளால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், தான் ஒருபோதும் சாதி அடிப்படையில் மக்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார். அடையாள அரசியலை மட்டுமே நம்பிப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்த கட்கரி, பொது நலன் மற்றும் சமத்துவமான அணுகுமுறையே நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை என்பதைத் தனது உரையின் வாயிலாக வலியுறுத்தினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொல்கத்தாவில் 144 தடை உத்தரவு..! வாக்கு எண்ணிக்கையை ஒட்டி முன்னெச்சரிக்கை..!
    Next Article விஜய் அண்ணா ஜெயிக்கணும்னு ஆசையா இருக்கு!. பிரபல நடிகை ஓபன் டாக்!
    Editor web3
    • Website

    Related Posts

    ஜி7 உச்சிமாநாடு.. ‘அன்புள்ள நண்பர் நரேந்திரா…’!. இந்தியில் கூறிய மக்ரோன்!.

    June 19, 2026

    தென் கொரியாவை சாய்த்த மெக்ஸிகோ!. உலகக்கோப்பை களத்தில் விறுவிறுப்பு!

    June 19, 2026

    ஃபிஃபா அப்டேட் : செக் குடியரசு – தென்னாப்ரிக்கா இடையிலான போட்டி டிரா..!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜி7 உச்சிமாநாடு.. ‘அன்புள்ள நண்பர் நரேந்திரா…’!. இந்தியில் கூறிய மக்ரோன்!.

    தென் கொரியாவை சாய்த்த மெக்ஸிகோ!. உலகக்கோப்பை களத்தில் விறுவிறுப்பு!

    ஃபிஃபா அப்டேட் : செக் குடியரசு – தென்னாப்ரிக்கா இடையிலான போட்டி டிரா..!

    ஃபிஃபா அப்டேட் : போஸ்னியாவை பந்தாடிய ஸ்விட்சர்லாந்து..! புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்திற்கு முன்னேற்றம்..!

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!. இன்று என்ன நடக்கும்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.